தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 19 maart 2012

இந்து ராமுக்கு டெல்லியில் செருப்புக் காட்டப்பட்டது !

தமிழரை கொன்ற இந்தியாவும் அதன் காங்கிரசும்! அரசுக்கு ராமும் அவரது இந்து பத்திரிக்கையும் கொடுத்த ஒத்துழைப்பும்!!



நான்காம் கட்ட ஈழப்போர் மணலாற்றில் சிங்கள அரசினால் மூட்டு விக்கப்பட்டது முதல் கடந்த 2009-ல் முள்ளிவாய்க்காலில் நடந்த தமிழ் இனப்படுகொலை வரை சிங்கள அரசுக்கு ராமும் அவரது இந்து பத்திரிக்கையும் கொடுத்த ஒத்துழைப்பு, சோனியா தலைமயிலான மத்திய அரசு கொடுத்த ஒத்துழைப்pukku nikaraaNathu என்றால் அது மிகையாகாது. ராஜபக்சே தர்பாரின் அனைத்து உயர் மட்டங்களிலும் தனிச்செல்வாக்குடன் திகழ்ந்த பார்ப்பன ராமின் செய்தி முகவர்கள் சிங்கள ராணுவத்தின் வாலாகவே போர்க்களமெங்கும் திரிந்தார்கள்.

இனப்படுகொலையை அருகிலிருந்து ரசித்தும் அந்த செய்திகளை திரித்தும் இலங்கை அரசுக்கு சார்பாக செயல்பட்டார்கள். இந்த கைங்கர்யங்கள் மூலம் மனித குலத்துக்கு எதிரான மாகுற்றங்களுக்கு துணை நின்று தமிழினப்படுகொலையின் பங்காளிகளான இந்து ராம் கூட்டம் சென்னை அண்ணா சாலையில் தான் தனது குற்ற பரம்பரையுடன் வாசம் செய்கிறது என்பது தமிழர்களில் பலபேருக்கு தெரியாது.

இது இவ்வாறிருக்க கடந்த மார்ச் 15-ஆம் திகதி இந்த சிங்கள ரத்தின ராம் தில்லி மாணவர்களிடம் செருப்படிக்கும் காறித்துப்பலுக்கும் ஆளானது எத்துணை பேருக்கு தெரியும் ?

கூலி பெற்று செய்தி வெளியிடல் மற்றும் ஊடக தர்மம் (Paid news and media ethics) பற்றி ஜவகர்லால் நேரு பல்கலை கழகத்தில் இந்த சாத்தான் வேதம் ஓதியபோது தில்லி தமிழ் மாணவர் யூனியன் (DTSU) மற்றும் Democratic Students Union DSU வை சார்ந்த மாணவர்களால் மேற்சொன்ன செருப்படி நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் ராமை தூக்கிப்பிடிக்கும் சி�பி�எம் -இன் ஒரு அங்கமான எஸ்�எஃப்�ஐ ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்திலேயே இது நடந்தேறியது.

�பாலஸ்தீனத்தில், ஈரானில், ஈராக்கில் ஊடக சுதந்திரம் பறிக்கப்பட்டது பற்றி வாய் கிழிய பேசும் நீ இலங்கையில் ஊடகங்கள் முற்றாக ஒடுக்கப்பட்டபோதும் லசந்த விக்கிரமசிங்கா போன்ற நேர்மை மிகு ஊடகவிலாளர்கள் வெள்ளை வானில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டபோதும் இனப்படுகொலை போரை ஆதரித்து எழுதி ராஜபக்ஷேவின் பின்புறத்தை சொறிந்து கொண்டிருவன் தானே நீ?� என DTSU வை சேர்ந்த மாணவர் காரி உமிழ்ந்த போது திகைத்து நின்றார் இந்த ராம்.

"இலங்கை ராணுவத்தை விமரிசிக்கும் நீங்கள் விடுதலைப்புலிகளை என் விமரிசிப்பதில்லை� என்று மகிந்தாவின் குரலில் பேசிய இந்த ராம் விடுதலைப்புலிகளை பற்றி பத்து நிமிடங்களுக்கு மேல் திட்டி தீர்த்ததையும் அத்தோடு �இலங்கை ராணுவமும் கொஞ்சம் எல்லை மீறிவிட்டதுதான் � என்று ஒப்புக்கு ஓரிரு வார்த்தைகள் பேசியதையும் ஒப்பிட்டுக்காட்டிய ஒரு DSU செயற்பாட்டாளர் �உமது இந்த பேச்சு ஒன்றே போதும் உமது பக்கசார்பு (சிங்கள சார்பு) நிலையை பறை சாற்ற �� இது தான் நீர் தெரியப்படுத்த விரும்பும் உமது ஊடக தர்மமா? என்றபோது மொத்த கூட்டமும் �வெட்கம்� .. வெட்கம் .. என்றும், �மீடியா பேசிஸ்ட்� ராஜபக்சேவின் கைக்கூலி ராம் என சீறித்தள்ளியது.

எந்த தமிழ் மக்களின் பணத்தில் வயிறு வளர்க்கிறானோ அதே தமிழ் மக்களை கொன்று குவிப்பதற்கு துணை நின்றும் தேசியத்தலைவர் பிரபாகரனின் உடல் தான் இது என்று ஏதோ ஒரு உடலுக்கு பொய் சாட்சி சொல்லியும் போர்க் குற்றவாளி ராஜபக்ஷேவிடம் பெற்ற கூலிப்பணத்தில் மாமல்ல புரத்துக்கருகில் 30 ஏக்கர் உயர்மதிப்பு சொத்தை வாங்கிப்போட்டிருக்கும் இந்த ராம் கூட்டத்துக்கு இது கொஞ்சம்தான் இன்னும் நிறைய காத்திருக்கிறது என்கிறார் ஒரு தமிழ் இனப்பற்றாளர்.

- முத்துக்குமரதாசன்
(செய்தி ஆதாரம் தமிழ் நெட்)

Geen opmerkingen:

Een reactie posten