தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 maart 2012

இலங்கையின் நிலைப்பாட்டை தொடர்ந்தும் கண்காணிப்போம்!- த. தே. கூட்டமைப்பிடம் கனடியப் பாராளுமன்றக்குழு!


கனடாவிலிருந்து இலங்கைக்குத் தற்போது விஜயம் செய்துள்ள பாராளுமன்றக்குழு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கனடியத் தூதரின் இல்லத்தில் சந்தித்து மிகவும் ஆரோக்கியமானதொரு பேச்சுவார்த்தையை மேற்கொண்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் சார்பில் திரு. சம்பந்தன், திரு. சுமந்திரன் மற்றும் திரு. மாவை சேனாதிராசா ஆகியோரை கனடியத் தூதரின் இல்லத்தில் வைத்து சந்தித்த மேற்படி குழுவினர் வட கிழக்கு மாகாணத்தின் சமகால நிலவரங்கள் குறித்த தகவல்களை மிகவும் உன்னிப்பாக கேட்டறிந்து கொண்டனர்.
குறிப்பாக தமிழர்களின் மீள் குடியேற்றங்கள் மற்றும் போரின் பின்னர் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்கள் என்பன பற்றிய விபரங்களைத் தெளிவாகக் கேட்டறிந்தனர்.
அத்தோடு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள் சாத்தியப் படக்கூடிய தீர்வு பற்றியும், ஜெனிவாத் தீர்மானத்திற் குறிப்பிடப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படக்கூடிய நடைமுறைச் சிக்கல் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.
கனடிய அரசு தொடர்ந்தும் நிலைமைகளைக் கவணிக்கும் என்றும் தாங்கள் இராஜதந்திரிகளினூடாகவும் நேரடியாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்ந்தும் பேணுவோம் என்றும் அதுபோலவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தங்களுடன் தொடர்புகளை பேணுமாறும் மேற்படி குழுவினர் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
கனடியப் பாராளுமன்றக் குழுவிற்குத் தலைமை தாங்கிச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் திரு. கிறிஸ் அலெக்ஸாண்டர் அவர்களும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சுமந்திரன் அவர்களும் இந்த ஆண்டு ஜனவரியில் இடம்பெற்ற கனடியத் தமிழ்க் காங்கிரஸின் பொங்கல் விழாவில் சிறந்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அதன்பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு. சுமந்திரன் அவர்கள் கனடியப் பாராளுமன்ற உறுப்பினர் கிறிஸ் அலெக்ஸாண்டர் அவர்களின் அலுவலகத்திற்கு நட்புரீதியான விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten