ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் முகத்தை உடலில் பச்சை குத்திக் கொள்கின்ற அளவுக்கு அவரின் செல்வாக்கு தென்னிலங்கைச் சிங்களவர்கள் மத்தியில் உள்ளது. யுத்தம் அற்ற இலங்கை ஒன்றை உருவாக்கிக் கொடுத்தார் என்பதால் இவர் தென்னிலங்கையின் பெரியவர்கள், சிறியவர்கள் ஆகியோரின் ஹீரோவாக உலா வந்து கொண்டு இருக்கின்றார். விலைவாசி ஏற்றம், குடும்ப ஆட்சி, போர்க் குற்றச்சாட்டுக்கள் போன்ற எதிர்மறையான விடயங்கள் மஹிந்தரின் செல்வாக்கை தென்னிலங்கையில் குறைக்கவில்லை என்றே தோன்றுகின்றது. |
Geen opmerkingen:
Een reactie posten