குற்றவாளிகளுக்காகவும் பணத்திற்காகவும் பாதிக்கப்பட்ட மக்களை நடுத்தெருவில் விடும் செயற்பாடுகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் அவர்கள் சட்டவாளர்களும் நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
இது தொடர்பில் மக்கள் மேலும் தெரிவிக்கையில்,
சுமங்கலி விடுதி வழக்கில் சட்டத்தரணி மு.றெமிடியஸ், உடுவில் கோட்டக்கல்வி அதிகாரி வழக்கில் சட்டத்தரணியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பராளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீகாந்தா, இவர் முன்னர் கூட திருகோணமலையில் சிவன் கோயில் குருக்கள் மனைவியை கொலை செய்து புதைத்த வழக்கில் அவருக்கு சார்பாக வாதாடினார்.
வரணியில் உள்ள பாதிரியார் ஒருவர் சிறுமி மீது மேற்கொண்ட பாலியல் ரீதியான துஷ்பிரயோகத்தில் பாதிரியாருக்கு ஆதரவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரனும் வாதாடுகின்றார்.
சமூகச் சீரழிவுகளுக்கும் கலாச்சார சீரழிவுகளுக்கும் எதிராக போராட வேண்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் முன்னர் கூட்டமைப்பில் அங்கம் வகித்தவர்களும் அதற்கு சார்பாக வாதாடுகின்றனர். அப்படியானால் அவர்கள் இவ்வாறான சீரழிவுகளுக்கு வித்திடுகின்றனரா? என்கிற சந்தேகம் எழுகின்றது
யாழ்ப்பாணத்திற்கு என வழமையான கூட்டுக் குடும்பம் வாழ்க்கையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு பேரன், தகப்பன் என அனைவருமே சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்படுகின்ற சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.
உலகிற்கு உயர்ந்த கலாசாரம், உயர்ந்த பண்பாடு, உயர்ந்த நாகரீகம் என்பவற்றை கொடுத்த தமிழர்கள், இன்று ஒரு காட்டுமிராண்டி இனமாகவும் பண்பாடு, கலாசாரம் என்பவற்றை இழந்த இனமாகவும் உலகிற்கு காட்டும் முயற்சிகளில் இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
அதன் அடிப்படையிலேயே பெரும்பான்மை இனம் மற்றும், ஒரு சிறுபான்மை இன போதைபொருள் வியாபாரிகள் மற்றும் பாலியல் சீர்கேட்டை உண்டு பண்ணுகின்றவர்கள் அதற்கான முயற்சிகளில் செயற்பட்டு வருகின்றனர்.
இவை தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆரோக்கியமான ஒரு தமிழ் பண்பாட்டுடன் கூடிய கலாச்சாரத்தை உண்டு பண்ணவேண்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதன் முன்னாள், இந்நாள் சட்டவாளர்களும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு துணைபோவது போல் அதற்காக வாதாடுவது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வேதனையை உண்டு பண்ணியுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கு உள்ளேயும் வெளியேயும் பலர் கங்கணம் கட்டி செயற்பட்டுக் கொண்டிருகின்றனர். இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் விரக்தி நிலையை உண்டு பண்ணுகிறது.
இவ்வாறு பணத்திற்காக குற்றவாளிகளுக்காக வாதாடும் செயற்பாடுகள் சுமந்திரன், ஸ்ரீகாந்தா, றெமீடியஸ் போன்ற சட்டவாளர்கள் நிறுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மக்களை நல்வழிப்படுத்தி அவர்களை பாதுகாத்து இந்த சமூகத்தை பாதுகாத்து வழி நடத்த வேண்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் அவர்களது சட்டவாளர்களும் மக்களை தெருவில் விடவேண்டாம் என பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக மக்கள் மன்றாட்டமாய் கேட்கின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten