இலங்கை அரசு மனித உரிமைகள் தொடர்பில் இன்னும் போதுமான அளவில் கவனம் செலுத்தவில்லை எனவும், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணை நடாத்த வேண்டும் எனவும் கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோன் பார்ட் குற்றம் தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் இது வரை கவனம் செலுத்தவில்லை.
அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் சர்வதிகாரப்போக்கு மேலோங்கி வருவதை காணக்கூடியதாக இருப்பதாகவும் கனேடிய வெளியுறவு அமைச்சர் ஜோன் பார்ட் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டமையினை கனடா அரசாங்கம் வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கனடிய அரசானது இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணை நடாத்த வேண்டும் என தொடர்ந்தும் வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதனடிப்படையில் இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் தொடர்பான உரிய செயற்திட்டம் ஒன்றை செயற்பாட்டிற்கு கொண்டு வருவதுடன் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten