இலங்கை தொடர்பில் ஜெனீவா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையைக் கொண்டு இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க முடியாது என்றும், ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையில் ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டாலே அவ்வாறு இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க முடியும் என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் இடம்பெற்ற 19வது மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் இலங்கைக் குழுவால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றபோதே அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர்களான ஜி.எல்.பீரிஸ் மற்றும் மஹிந்த சமரசிங்க தலைமையில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.
இரண்டாம் இணைப்பு
அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை!
எவ்வாறான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும், அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாது என அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவின் பிரேரணை குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு இன்று அமைச்சரால் வெளியிடப்பட்டது.
இதன் போது உரையாற்றிய அமைச்சர், ஜெனீவா மாநாட்டில் அமெரிக்காவின் பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும், இலங்கைக்கு எதிராக பொருளதார தடை விதிக்க முடியாது என குறிப்பிட்டார்.
ஜெனீவா மாநாட்டில் இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் பின்னர், இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்படலாம் என்ற அச்சம் தற்போது பரவலாக காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும் இவ்வாறு யாரும் அச்சம் கொள்ளவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த பிரேரணை பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்லப்படவில்லை.
எனவே இதன் மூலம் எந்த நிலைமையிலும் பொருளாதார தடையை ஏற்படுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், உள்நாட்டு பிரச்சினையில் வெளிநாடுகளின் ஆதிக்கம் இருக்க கூடாது என்பதற்காகவே, இந்த பிரேரணைக்கு எதிராக அரசாங்கம் போராட்டம் நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, சர்வதேச ரீதியாக எவ்வாறான அழுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டாலும், அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கையில் மாற்றம் இல்லை என அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் பின்னர், இலங்கைக்கு எதிராக எந்த அழுத்தங்களும் ஏற்படுத்தப்படவில்லை. எந்த நிலையிலும் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளில் மாற்றம் ஏற்பாடாது என அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் அரசாங்கம் மேற்கொண்ட எந்த செயற்பாடுகளிலும், மாற்றங்கள் ஏற்பட போவதில்லை என தெரிவித்த அவர், இலங்கையின் உள்நாட்டு தீர்மானங்களை ஜனாதிபதியே
தீர்மானிப்பாரே தவிர, சர்வதேச நாடுகள் இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
Geen opmerkingen:
Een reactie posten