தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 22 maart 2012

அமெரிக்கா ஐ.நா. பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணையை சமர்ப்பித்தது! தீர்மானம்' வெற்றி பெற்றது !


இலங்கை தொடர்பான பிரேரணை ஒன்றை ஐக்கிய அமெரிக்கா சற்று முன்னர் ஐநா மனித உரிமைகள் பேரவையின்  19வது கூட்டத் தொடரில் முன்வைத்துள்ளது.
இலங்கை தொடர்பில் அமெரிக்கா மிதமான சமச்சீரான பிரேரணை ஒன்றையே ஐநா மனித உரிமை கவுன்ஸிலில் முன்வைத்துள்ளதாகவும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைகளை செயற்படுத்த வைப்பதே பிரேரணையின் நோக்கம் எனவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.
யுத்தம் முடிந்து இலங்கை தனது வழியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த 3 வருடங்கள் கால அவகாசம் இருந்ததாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
பிரேரணை நிறைவேறுவதன் மூலம் இலங்கையில் நல்லிணக்கம் அமைதி, சமாதானம் என்பவற்றை ஏற்படுத்த முடியும் என அமெரிக்கா பிரேரணையை முன்வைத்து தெரிவித்துள்ளது.
ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பிலான விவாதம் தொடங்கியது
உலகத் தமிழ் மக்களின் எதிர்பார்புக்கு உள்ளாகியிருந்த  இலங்கை தொடர்பிலான விவாதம் சற்று முன்னர் தொடங்கியது.
விவாதத்தின்போது சபையில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், மகிந்த சமரசிங்க, மொகான் பீரிஸ் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இலங்கையின் விசேட தூதுவர் மகிந்த சமரசிங்க தமது தரப்பு வாதங்களை முன்வைத்து உரையாற்றுவதாகவும் தெரியவருகிறது.
அதேவேளை விவாதத்தைத் தொடர்ந்து பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தீர்மானம் 9 அதிகப்படியான வாக்குளால் நிறைவேறியது
ஜெனிவா ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையானது 9 அதிகப்்படியான வாக்குகளினால் நிறைவேறியயது.
இப்பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா உட்பட்ட 24 நாடுகளும் எதிராக சீனா மற்றும் ரஸ்யா உட்பட்ட 15 நாடுகள் எதிராகவும் வாக்களித்துள்ளன.
மிகுதியான 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten