[ வீரகேசரி ]
இலங்கையில் ஊடகவியலாளர் மீதான தாக்குதலை நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு இலங்கை செல்வதாக அறிவித்துள்ள ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை அரச ஊடகங்கள் சில ஊடகவியலாளர்களையும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களையும் இலக்கு வைத்து கடும் விமர்சனங்களை மேற்கொண்டு வருகின்றன. இதனால் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது எனவும் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
இலங்கை ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளது.
அரச ஊடகங்கள் சில ஊடகவியலாளர்களையும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களையும் தேசத் துரோகிகள் என வர்ணிக்கின்றன.
இந்த செயற்பாடுகள் மோசமாக விளைவுகளை ஏற்படுத்தும்.
எனவே, இலங்கையில் தகவல் அறியும் உரிமை மற்றும் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள உலகளாவிய செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தும்படி இலங்கையை வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு இலங்கை செல்வதாக அறிவித்துள்ள ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten