தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 24 maart 2012

சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலானஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் ஒருங்கிணைப்பு பணிகள் ஆரம்பம்!


வடகிழக்கு பகுதிகளில் கடந்த காலங்களில் இயங்கிவந்த சுரேஸ்பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியை மீண்டும் ஒருங்கிணைப்பு செய்யும்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர்தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில் கடந்தகாலங்களில் தமிழ்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படும் எமது ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியை நாங்கள் மீண்டும்ஒருங்கிணைப்புச் செய்து வருகின்றோம் இதன் ஒரு கட்டமாக இன்றும்(24.03.2012) நாளையும் (25.03.2012) மட்டு அம்பாறை மாவட்டங்களில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளது.
இக் கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களும் சிவசக்தி ஆனந்தன் அவர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன் எங்களது கட்சி நடவடிக்கைகள் காரணமாக எக்காரணம் கொண்டும்தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான உறவில் பாதிப்பு ஏற்படாதென்றும் இது எங்களது கட்சியின் தனிப்பட்ட செயற்பாடு என்றும் இதற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் கூறினார்.

Geen opmerkingen:

Een reactie posten