தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 maart 2012

குகனின் மனைவிக்கு இராணுவத்தினர் அச்சுறுத்தல் !


யாழ். குடாவில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட மனித நேய செயற்பாட்டாளரான குகன் முருகானந்தனின் பாரியாருக்கு நேற்று மாலை (23) இராணுவ அதிகாரிகளினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக �நாங்கள் சிறிலங்கா� அமைப்பு தெரிவித்துள்ளது.குகன் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையோர் இராணுவத்தினர் எனச் சந்தேகிக்கப்படும் இந்த வேளையில், இவ்வாறான அச்சுறுத்தல் மிகப் பாரதூரமானது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

நேற்று மாலை 4.00 மணியளவில் இராணுவ ஜீப் வண்டியில் அச்சுவேலி பிரதேசத்திலுள்ள குகனின் வீட்டுக்கு வந்த நான்கு இராணு அதிகாரிகள் குகனின் மனைவி யார் என்று விசாரித்துள்ளனர். அதன் பின்னர் அவரிடம் சிங்களத்தில் எழுதப்பட்ட கடிதம் ஒன்றினைக் கொடுத்து அவரிடம் ஒப்பமிடுமாறு பலாத்காரப்படுத்தியதுடன். அவரைப் புகைப்படமும் பிடித்துள்ளனர். இதன்போது மோசமான வார்த்தைகளால் அவரது மனைவியைத் திட்டியும் தீர்த்துள்ளனர்.

இவ்வாறு இராணுவ அதிகாரிகள் நடந்து கொண்டமையானது பாரதூரமானதாகும். என நாம் இலங்கையர் அமைப்பு தெரிவித்துள்ளது..கடந்த வருடம் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி மனித நேய செயற்பாட்டாளர்களான குகன் முருகானந்தன் மற்றும் லலித் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் வைத்துக் கடத்தப்பட்டமை தெரிந்ததே.

Geen opmerkingen:

Een reactie posten