புணர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் உறுப்பினர்கள் சிலரை தாம் விடுவிப்பதாக இலங்கை அரசு அறிவித்திருந்தது. நேற்றைய தினம் கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள ராமகிருஷ்ன மண்டபத்தில் இந் நிகழ்வு நடைபெற்றது. சுமார் 380 பேர் இதில் விடுவிக்கப்பட்டனர். இந் நிகழ்வுகளில் பெண் போரளிகளை நாகரீக உடைகள் அணிந்து வரும்படி இராணுவத்தினர் பணித்திருந்தனர். இருப்பினும் பல பெண் போராளிகள் இதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டனர். இறுதி நேரத்தில் பல மாடல் அழகிகளை இலங்கை அரசு வாடகைக்கு அமர்த்தி, இந் நிகழ்வுகளை கிளு கிளுப்புக் குறையாமல் நடத்தி முடித்துள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது.
இந் நிகழ்வுகளில் கலந்துகொண்ட மாடல் அழகிகளில் ஒருவர், சான்றிதழ்களை கையில் எடுத்து கொடுப்பதை படத்தில் காணலாம். குறிப்பிட்ட இச் செய்தி சிங்கள இணையங்களில் வெளியாகியுள்ளது. பரிசுகளை வழங்கும் சிங்களப்பெண்ணை, விடுதலைப் புலிகளின் பெண் போராளி என நினைத்து பல சிங்கள இளைஞர்கள் இச் செய்திக்கு பின்னூட்டங்களை(காமென்ஸ்) கொடுத்துள்ளனர். இதில் ஒரு சிங்கள இளைஞர், இப்படியான பெண்கள் புலிகள் இயக்கத்தில் இருந்திருந்தால், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தானும் சேர்ந்திருப்பேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதைத் தவிர மற்றுமொரு விடையமும் நேற்று நடந்தேறியுள்ளது. இன் நிகழ்வுகளுக்கு பாதுகாப்பு வழங்கவென பல இராணுவத்தினர் நேற்று அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் சரியான இடத்தில் சிறுநீர் கழிக்கவில்லையாம். சிறுநீர் கழிக்கும் அறையைக் கண்டு பிடிக்க முன்னரே அக்கம் பக்கத்தில் உள்ள இடங்களில் இந்த இராணுவத்தினர் சிறுநீர் கழித்ததால், ராமகிருஷ்ன மண்டபத்தின் ஏனைய பகுதிகள் நாறுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெண் புலிகளை நவநாகரீக ஆடைகளில் பார்த்து ரசிக்கும் இரணுவம் !
29 March, 2012 by admin
இன்றைய தினம்(29) சுமார் 384 விடுதலைப் புலிகள் உறுப்பினர்களைத் தாம் விடுதலை செய்ய உள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. இலங்கை நேரப்படி சுமார் மாலை 4.00 மணிக்கு வெள்ளவத்தையில் அமைந்துள்ள ராமகிஷ்ன மண்டபத்தில், கோலாகலமாக நடைபெறவுள்ள விழாவில் பெண் புலிகள் நவநாகரீக உடையணிந்து கட்-வாக் என்று சொல்லப்படும் (ஒருவகை ஆபாச நடை), நடக்கவுள்ளனராம். இதனை இராணுவத்தினரும், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் பார்வையிட உள்ளனர். இன்று விடுதலை செய்யப்படும் புலிகள் உறுப்பினர்களில் கணிசமான அளவு பெண்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
பெண் போராளிகள் இவ்வாறு நவநாகரீக உடைகளை அணிந்து மேடைகளில் தோன்றுவதும், நடப்பதும், இவர்கள் விடுதலைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் இன்றைய தினம் விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளின் பேஃஷன் -ஷோ உள்ளது என்று மட்டும் எல்லா சிங்கள ஊடகங்களும் கிளுகிளுப்புச் செய்தி வெளியிட்டுள்ளது. இறந்த பெண் போராளிகளின் ஆடைகளைக் களைந்து, அவதூறு வார்த்தைகளைப் பேசி, அநாகரீகமாக நடந்த இராணுவத்தினர், இப்போது உயிரோடு உள்ள பெண் போராளிகளை நவநாகரீக உடைகளைப் போட்டு ஆபாச நடை நடக்கச்சொல்லி கண்டுகழிக்கப்போகிறார்கள் !
இதனைப் புணர்வாழ்வு அமைச்சர் சந்திரஸ்ரீ பார்வையிட உள்ளார் என்றும் அதிர்வு இணையம் அறிகிறது. இதில் கருணா கலந்துகொள்வாரா இல்லையா எனத் தெரியவில்லை. விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை தாம் எவ்வாறு மாற்றியிருக்கிறோம் என்று பாருங்கள் என்று விளம்பரம் வேறு அரச தொலைக்காட்சிகளில் போகிறது என்றால் பாருங்களேன் !
Geen opmerkingen:
Een reactie posten