தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 24 maart 2012

விக்கிலீக்ஸ்: அரசின் தவறுகளை இந்தியாவுக்கு காட்ட துணிந்ததால் போட்டுத் தள்ளப்பட்ட மகேஸ்வரன்!


இலங்கை அரசின் தவறுகளை இந்திய அரசுக்கு வெளிப்படுத்த இருந்த நிலையிலேயே ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராசா மகேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றார் என்கிற சந்தேகம் அமெரிக்காவுக்கு உள்ளது.

கொழும்பு கொட்டாஞ்சேனை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் வைத்து 2008 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி துப்பாக்கிதாரி ஒருவரால் மகேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இப்படுகொலை குறித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து மறுநாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு வைக்கப்பட்ட இராஜதந்திர ஆவணத்தில் இருந்து மேற்சொன்ன அதிர்ச்சித் தகவல் விக்கிலீக்ஸ் மூலம் தமிழ். சி. என். என் இற்கு கிடைத்து உள்ளது.

அது குறித்த விபரம் வருமாறு:-
-அரசின் தவறுகளை மகேஸ்வரன் வெளிப்படுத்த திட்டமிட்டு இருந்தார். இவர் சக்தி ரி.வியின் மின்னல் நிகழ்ச்சியில் டிசம்பர் 30 ஆம் திகதி தோன்றினார். பொதுமக்களை யாழ்ப்பாணத்தில் கடத்தியும் படுகொலை செய்தும் வருகின்ற துணை ஆயுதக் குழுவினர், பாதுகாப்பு பிரிவினர் ஆகியோரின் பெயர் மற்றும் விபரம் ஆகியவற்றை ஜனவரி 08 ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பார் என்று அதில் தெரிவித்து இருந்தார். கொழும்பில் இருந்து வந்திருக்கின்ற கொலையாளிகள் யாழ்ப்பாணத்தில் நாளாந்தம் 06 சிவிலியன்களை கொல்கின்றனர் என்றும் ஒரு மாத சுற்றுப் பயணத்துக்கென யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டு  இருக்கின்ற இக்கொலையாளிகள் இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பில் இருக்கின்ற ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர் என்றும் லங்கா ஈ நியூஸ் இணயத் தள செய்திச் சேவைக்கு டிசம்பர் 31 ஆம் திகதி தெரிவித்து இருக்கின்றார் மகேஸ்வரன்

இவை சம்பந்தப்பட்ட விபரங்களை இந்திய பிரதமர் மன்மோஹன் சிங் இலங்கைக்கு பெப்ரவரி மாதம் வருகின்ற ஆதாரங்களுடன் சிங்குக்கு சமர்ப்பிப்பார் என்று மகேஸ்வரன் அறைகூவல் விடுத்து இருந்தார்.

இவ்வாறு நிகழ்கின்றமைக்கு முன்பாக ஈ.பி.டி.பியினரை கொண்டு மகேஸ்வரனை அரசு படுகொலை செய்து விட்டது என்கிற ஊகம் பரவலாக அடிபடுகின்றது. இக்குற்றச்சாட்டு பலமானதுதான். ஏனென்றால் அதியுயர் பாதுகாப்பு வலய பிரதேசத்தில் அதுவும் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் படுகொலை இடம்பெற்று உள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten