புலிகளிடம் தோற்றவர்கள் இந்திய படையினர்(ஆயுதமற்றவரை அடித்து துன்புறுத்தி கொல்வதும் பெண்களை பாலியற்பலாத்காரம் செய்வது மட்டுமே இவர்களால் முடிந்தது,வீரரை கண்டால்?),புலிகளை வென்று விட்டனர் இலங்கை படையினர்,அதுதான் இந்திராகாந்திக்கு நம்பிக்கைத்துரோகம் செய்த கூட்டமான சிங் ராஜபக்சாவுக்கு பயந்து மன்னிப்பு கேட்டுள்ளார்,இது அவரின் பயமல்ல,இந்தியாவின் ஒட்டுமொத்த பயம்,பயமில்லைஎனில் எப்படி அதை நிரூபிப்பீர் களாம்??
ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்வைத்த தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தமைக்காக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் எமது நாட்டின் பிரதமர் மன்னிப்புக் கேட்டு கடிதம் அனுப்பினார் என்பதற்காக நான் வெட்கப்படுகிறேன்" என்று இந்திய மனித உரிமை செயற்பாட்டாளர் கவிதா சிறிவஸ்றவா தெரிவித்தார்.
மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் சட்டமின்மையும் அரசின் தப்பிக்கும் போக்கும் மிதிபடும் ஜனநாயகமும் மனித உரிமைகளும் என்ற தலைப்பில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் "சட்டமின்மையும் சிறுபான்மையினரும்" என்ற தலைப்பில் பேசும் பொழுதுமேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமைகள் மீறலுக்காக இந்தியாவின் சார்பாக அளிக்கப்பட்ட ஆதரவிற்கு பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மன்னிப்பு கோரியுள்ளார்.
இந்த நாட்டின் ஜனநாயகமும் மனித உரிமை குறித்த அக்கறையும் இப்படி இருக்கிறது என்பதற்காக நான் வெட்கப்படுகிறேன் என்றார் மனித உரிமைப் செயற்பாட்டாளரான கவிதா சிறிவஸ்றவா.
Geen opmerkingen:
Een reactie posten