தங்கள் உயிரை மட்டுமே அக்கறையாக கொண்டுள்ள கூட்டமைப்பினர் அறிக்கையின் முழுமையும் தெரியாத மப்பில் உள்ளனர்,மக்களில் இவர்களின் அக்கறை எப்படி?ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா முன்வைக்கும் இலங்கை தொடர்பான பிரேரணைக்கு ஆதரவளிக்க இந்திய அரசாங்கம் தீர்மானித்ததை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் இத்தீர்மானம் மிகவும் வரவேற்புக்குரியது. ஏனெனில், தேசிய நல்லிணக்கம் மற்றும் நிரந்தர அரசியல் தீர்வு என்பனவற்றுக்கு அவர்களின் முயற்சிகள் மிகவும் முக்கியமானவை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பானது நாட்டிற்கு எதிரானது அல்ல எனவும் இந்தியாவின் தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதானது நல்லிணக்கத்தற்கான முயற்சிகளில் அது ஏற்படுத்தும் தாக்கமே காரணம் எனவும் அவர் கூறினார்.
இப்பிராந்தியத்தில் இந்தியா மிகப் பெரிய நாடாகும். இந்நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் அது பாரிய பாத்திரமாற்ற வேண்டியுள்ளது.
உலகுக்கும் இந்நாட்டின் மக்களுக்கும் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் மேலும் பொறுப்புணர்வைக் கொண்டிருக்கும் என நாம் நம்புகிறோம் என மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள இப்பிரேரணையின் சரியான உள்ளடக்கம் இன்னும் எமக்குத் தெரியவில்லை.
எனினும் நாட்டில் உறுதியான நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு உதவக்கூடிய, இந்நாட்டின் தேசிய மட்டத்தில் விவாதிக்கப்பட்ட சகல விடயங்களையும் அது உள்ளடக்கியிருக்கும் என நாம் நம்புகிறோம் என அவர் கூறினார்.
Geen opmerkingen:
Een reactie posten