தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 19 maart 2012

இலங்கைக்கு எதிரான தீர்மானம்! ஆதரிப்பதில்லை என முடிவெடுத்திருந்தால் திமுக மத்திய அரசிலிருந்து விலகத் தீர்மானித்திருந்தோம்!- கருணாநிதி!


 [ தற்ஸ்தமிழ் ]நகைச்சுவையில் பட்டையை கிளப்பும் கலைஞர்,கலக்கத்தில் விவேக்,வடிவேல்,சந்தானம்....
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பதில்லை என்ற முடிவை பிரதமர் அறிவித்திருந்தால், திமுக அமைச்சர்கள் மத்திய அமைச்சரவையிலிருந்து விலகும் முடிவை எடுத்திருப்பார்கள். அதைத்தான் நாங்கள் தீர்மானித்து வைத்திருந்தோம். தற்போது அதற்கான தேவை இல்லாமல் போய் விட்டது என்று கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
இதுதொடர்பாக கருணாநிதியை இன்று செய்தியாளர்கள் சந்தித்து பல கேள்விளைக் கேட்டனர். அதற்கு வழக்கம் போல தனது பாணியில் பதிலளித்தார் கருணாநிதி. அந்தக் கேள்வி பதில்கள் இதோ...
கேள்வி: ஐ.நா.வில் இலங்கை இராணுவத்தைப் பற்றி இந்திய அரசு ஆதரிக்க முன் வராவிட்டால், உண்ணாவிரதம் இருக்கப் போவதாக இன்று காலையில் கேள்விகளிடம் கூறியிருந்தீர்கள். அதன் பிறகு சற்று நேரத்திற்கு முன்பு பிரதமர் நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்கும் என்று அறிவித்துள்ளார்கள். இப்போது உங்கள் நிலை என்ன?
கருணாநிதி: ஐ.நா. தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்காவிட்டால் உண்ணாவிரதம் என்று தான் கூறியிருந்தேன். தற்போது இந்திய அரசே அந்தத் தீர்மானத்தை ஆதரிக்கும் என்று அறிவித்திருப்பதால் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.
இலங்கைத் தமிழர் போராட்டம் வெற்றி பெற்று விட்டது
கேள்வி: இலங்கைத் தமிழர் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்திருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?
கருணாநிதி: ஆமாம். போராடியதற்குக் கிடைத்த வெற்றி, இப்போதும் போராடிக் கொண்டிருப்பவர்களுக்குக் கிடைத்த வெற்றி.
கேள்வி: பிரதமரின் பதில் உங்களுக்கு திருப்தி கொடுத்துள்ளதா?
கருணாநிதி: திருப்தியாக உள்ளது.
கேள்வி: உண்ணாவிரதம், நாளைய தினம் உயர்நிலை செயல் திட்டக் குழு எல்லாம் நடைபெறுமா?
கருணாநிதி: அதற்கெல்லாம் தேவையில்லாமல் போய் விட்டது. தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் உண்ணாவிரதம் நடத்த வேண்டு மென்று அறிவித்திருந்தோம். அதன் பிறகு மத்திய அரசு அந்தத் தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக பிரதமரின் கருத்து வெளி வந்துள்ளது.
எனவே நாங்கள் உண்ணாவிரதத்தை நடத்தப் போவதில்லை. அதைப்போல நாளை நடைபெறுவதாக இருந்த உயர் மட்டச் செயல் திட்டக் குழு கூட்டமும் தேவையில்லை என்று முடிவு செய்திருக்கிறோம்.
ஆனால் நாளையதினம் உயர் நிலை செயல் திட்டக் குழுவில் நிறைவேற்றுவதற்காக தீர்மானம் ஒன்றை இன்றைக்கு தயாரித்திருந்தோம். அது புத்தக வடிவில் வெளி வந்துள்ளது. அது தான் இந்தப் புத்தகம்.
ஆனால் இதற்கிடையில் பிரதமரின் அறிவிப்பு இலங்கைப் பிரச்சினையில் நாம் விரும்பியவாறு வந்து விட்ட காரணத்தால், இந்தத் தீர்மானம் அடங்கிய புத்தகத்தை வெளியிடாமல், அந்தத் தீர்மானத்தில் என்ன வாசகம் அடங்கியுள்ளது என்பதை மாத்திரம் உங்களுக்குச் சொல்ல விழைகிறேன்.
இந்திய அரசுக்கு அந்தத் தீர்மானத்தை ஆதரித்திட இயலாத நிலை உள்ளது என்று மத்திய அரசு தொடர்ந்து தெரிவிக்குமேயானால், இலங்கைத் தமிழர்களின் வாழ்விலே கொடூரமாக நடந்து கொண்டு நாற்பதாயிரம் பேருக்கு மேற்பட்ட இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை இராணுவத்திற்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கக் கூட முடியாத சூழலில், தொடர்ந்து மத்திய கூட்டணி அரசிலே தி.மு. கழகம் இடம் பெற வேண்டுமா என்பதனைக் கருதி - மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள தி.மு. கழக அமைச்சர்கள் அவர்தம் பொறுப்புகளிலிருந்து விலகிக் கொள்வார்கள் என்றும், அதே நேரத்தில் பிரச்சினைகளின் அடிப்படையிலே மட்டுமே மத்திய அரசுக்கு தி.மு. கழகம் ஆதரவு அளிக்க நேரிடும் என்றும் இந்த உயர்நிலை செயல்திட்டக் குழு தீர்மானிக்கின்றது என்றார் கருணாநிதி.
கருணாநிதியின் இந்தப் பேட்டியைப் பார்க்கும்போது இதே வாசகங்களை ஈழப் போரின் உச்சத்தின்போது பலமுறை கேட்ட ஞாபகம் இதைப் படிக்கும் அத்தனை பேருக்கும் வரும் என்பதில் சந்தேகமில்லை.

Geen opmerkingen:

Een reactie posten