தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 26 maart 2012

அனைத்து நாடாளுமன்ற குழு அமர்வுகளிலும் இலங்கைக்கு எதிரான பிரேரணை?


அனைத்து நாடாளுமன்ற குழு அமர்வுகளிலும் இலங்கைக்கு சவால் விடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் 30ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வரையில், உகண்டாவின் கம்பலா நகரில் அனைத்து நாடாளுமன்ற குழு அமர்வுகள் நடைபெறவுள்ளது. இந்த அமர்வுகளின் போது இலங்கைக்கு எதிராக பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
எதிர்க்கட்சிகளினால் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன நாடாளுமன்றில் தாக்குதல் நடத்தியமை, ஜோசப் பரராஜாசிங்கம் படுகொலை மற்றும் சரத் பொன்சேகாவின் நாடாளுன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, ஜெனீவா அமர்வுகளில் கிடைக்கப் பெற்ற அனுபவங்களைக் கொண்டு அனைத்து நாடாளுமன்ற குழு அமர்வுகளை வெற்றிகரமாக எதிர்நோக்கத் தயார் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க மற்றும் நிமால் சிறிபால டி சில்வா ஆகியோர் இந்த அமர்வுகளில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

Geen opmerkingen:

Een reactie posten