தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 23 maart 2012

"சிறீலங்கா அரசிற்கு எதிராக ஜெனீவாவில் பேச மறுப்பு!! " இலங்கை அரசாங்கத்திற்கு தண்டனை வாங்கிகொடுக்கமாட்டார் இரா.சம்பந்தன்.


சிறீலங்கா அரசிற்கு எதிராக ஜெனீவாவில் பேச மறுப்பு!!  "      

 இலங்கை அரசாங்கத்திற்கு தண்டனை வாங்கிக்  கொடுப்பதற்கான மிகமுக்கிய நர்வில்'  தமிழ்மக்களுக்கு கைவிரித்துள்ளர்   இரா.சம்பந்தன். இரா.சம்பந்தன் தமிழ்மக்களுக்கு தான் சம்பந்தம் இல்லாதவராக காட்டிவிட்டார்.  இவரின் கைவிரிப்பு பேச்சு, சமீபத்தில் அரிமாளிகையில் திடீர் விருந்துக்கு சென்று வந்த பின்னரே உறுதிபடுத்தபடுள்ளது.    இரா.சம்பந்தன்   முன்பும் இதுபோன்று பங்குகொள்ளாது சுகயீனகாரணம் காட்டி சமாளித்தார்.இந்த முறையோ சம்பந்தர் செல்லாது தவிப்பார் என்று இங்கு பலர் அபிப்ராயங்களை வெளிபடுத்தியிருந்தனர். அதை உறுதிபடுத்தும் வகையில்.  இவரின் முடிவு இப்போது  இருக்கிறது.மனோகணேசனின் தம்பி அரசின்பக்கம் இருந்துகொண்டு கூறும் கூற்றும், இரா.சம்பந்தனின் அறிக்கையும் ஒன்றாகவே உள்ளது.  சிறீலங்கா அரசிற்கு எதிராக ஜெனீவாவில் பேச மறுப்பு. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.  இதனால் தமிழரை கைவிட்டது கூட்டமைப்பு! இவரின் அறிக்கையால்.  உலகமெங்கும் பரந்துவாழும் தமிழ் மக்களை அதிர்ச்சியிலும், ஏமாற்றத்திலும் உறையவைத்துள்ளது.  (கவுண்டமணியின் அரசியல் வசனத்தில் ஓன்று.. அரசியல்ல  இது எல்லாம் சகமப்பா..) 

 தமிழ்மக்களின் பிரதிநிதிகள் என்று தங்களை காட்டிகொண்ட தமிழர் விடுதலை கூட்டணி இந்த முக்கிய நிகழ்வில் பங்களிக்காது வெறுமனே ராஜபக்சவின் விருந்துகளில் கலந்துகொள்ள மட்டும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். தமிழ் மக்களை வைத்து பிழைப்பு நடத்தும் கூட்டமைப்பு கேடுகெட்ட கூட்டணியாக இருக்கபோகிறது. 
இரா.சம்பந்தன் சம்பந்தம் இல்லாதவர்

Geen opmerkingen:

Een reactie posten