இலங்கை விமானப்படையினருக்கு சொந்தமான உலங்குவானூர்திகள் மற்றும் விமானங்களை, ரஷ்யாவில் இருந்து கொள்வனவு செய்த ஏவுகணைகளை கொண்டே புலிகள் அழித்துள்ளதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. புலிகள் விமானப்படைக்கு சொந்தமான சுமார் 8 விமானங்களை அழித்துள்ளனர்.
இந்த ஏவுகணையை பயன்படுத்தியே, 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் லயன் எயார் விமானத்தின் மீது புலிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்த தாக்குதலை நடத்திய நபர் தற்போது, கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு பயன்படுத்திய ஏவுகணையின் வெற்றுத் தோட்டா, பயங்கரவாத விசாரணை பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி அன்ரனோவ் விமானத்தை தாக்கிய இரண்டு பேர் கடந்த 26 ஆம் திகதி பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால், அனுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியிருந்தனர். இவர்கள் மேலும் இரண்டு விமானங்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாகவும், வில்பத்து வனத்தில் மறைத்திருந்து இவர்கள் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாகவும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
புலிகளின் ஏவுகணை பிரிவுக்கு பொறுப்பாக இருந்தாக கூறப்படும் கடாபி என்பவர், திறமையாக துப்பாக்கிச் சூடு நடத்தக் கூடியவர் எனவும் சுவரில், துப்பாக்கியால் சுட்டு தனது பெயரை தோட்டக்களில் பதிவுசெய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவரே விமானப்படையினருக்கு சொந்தமான விமானங்கள் பலவற்றை வீழ்த்தியுள்ளார்.
எனினும் புலிகளின் தாக்குதலினால், விழுந்து நொருங்கிய பல விமானங்கள் இயந்திரக் கோளாறு காரணமாகவே வீழ்ந்ததாக விமானப்படையினர் எண்ணி வந்துள்ளனர். போர் முடிவடைந்த பின்னர், புலிகளின் பதுங்குகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட ஏவுகணைகளில் வெற்று தோட்டக்கள், தாக்குதல் மூலமே விமானங்கள் வீழ்த்தப்பட்டதை உறுதிப்படுத்தியிருந்தன.
எவ்வாறாயினும் போரின் இறுதிக்கட்டத்தில், கடாபி கொல்லப்பட்டதாக கைதுசெய்யப்பட்ட புலி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten