தமிழரை கொன்றதற்கு பலவழிகளில் பாராட்டுத் தெரிவிக்கும் இந்தியாவும் அதன் காங்கிரசும்!
நேற்றைய தினம் டெல்லியில் நடைபெற்ற சர்வதேச விழா ஒன்றில், உலகிலேயே தலைசிறந்த இளைஞன் என்ற பட்டம் இலங்கை அதிபர் மகிந்தரின் புதல்வர் நமாலுக்கு வழங்கப்பட்டது. இந்த விழா ஏற்பாட்டாளர்களுக்கு, இந்திய அரசினால் நமாலின் பெயர் முன்மொழியப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளது. விருதுபெறச் சென்ற நமாலுக்கு சோனியா அரசு இசட்(Z) ரகப் பாதுகாப்பு வழங்கி கெளரவித்ததும் யாவரும் அறிந்ததே. ஆனால் அங்கே உரையாற்றிய நமால் ராஜபக்ஷ காங்கிரஸ் காலை வாரிவிட்டுள்ளார். காங்கிரஸ் அரசு சமீபத்தில் அடைந்த தோல்விகளைக் கூட இவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
அரசியல் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்து இருக்கின்றமை மாத்திரம் ஒருவருக்கு அரசியலில் வெற்றியைத் தராது ! என்று நமால் குறிப்பிட்ட வசனங்கள் ராகுல் காந்தியையும் பிரியங்கா காந்தியையும் மறைமுகமாகச் சாடுவதாக அமைந்துள்ளது. நமால் ராஜபக்ஷ அங்கு தொடர்ந்து பேசுகையில் அரசியல் பாரம்பரியம் மிக்க குடும் ஒன்றில் பிறந்து இருக்கின்றமை தேர்தல்களில் வேட்பாளராக நிற்கின்றமையை இலகுவாக்கி விடும், ஆனால் அரசியலில் வெற்றியை பெற்றுத் தரும் என்று உத்தரவாதம் இராது என்று குறிப்பிட்டார். அதாவது இவர் இவ்வாறு பேச காரம் என்ன ? என்று பல டெல்லி காங்கிரஸ் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
சமீபத்தில் நடந்த சில மாவட்டத் தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வியடைந்ததும், குறிப்பாக காங்கிரசின் கோட்டை என்று கருதப்பட்ட அமோதித் தொகுதியில் கூட காங்கிரஸ் மண் கவ்வியதும் யாவரும் அறிந்த விடையம். சூறிவளி தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி காங்கிரஸ் தோல்வியை ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கேட்டார். அரசியலில் தான் சில சறுக்கல்களைச் சந்தித்திருப்பதையும் அவர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். இந் நிலையில் வெந்த புண்ணில் வேல் பாச்சுவதுபோல நமால் ராஜபக்ஷ உரை அமைந்துள்ளது. குறிப்பாக இது ராகுல் காந்தியை குறிவைத்து பிரத்தியேகமாக எழுதப்பட்ட உரையாக இருக்கலாம் என இலங்கையில் உள்ள மூத்த அரசியல் புள்ளிகள் சிலர் அதிர்வு இணையத்துக்குத் தெரிவித்துள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten