[ வீரகேசரி ]
ஜெனிவா மனித உரிமைகள் அமைப்பின் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் வெற்றி பெற்றிருந்தாலும் அதற்கு முகங்கொடுக்கத் தாம் தயாராக இருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வாக்கெடுப்பில் அமெரிக்கா வெற்றி பெற்றிருந்தாலும் தாம் தமது நிகழ்ச்சி நிரலுக்கமைய நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஐ.நாவினூடாகக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு காலக்கெடு விதித்தாலும் அது குறித்து தாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த பத்திரிகையாளர் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளரும் பிரதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான லக்ஷமன் யாப்பா அபேவர்தன நேற்று இக் கருத்தினைத் தெரிவித்தார்.
அரசாங்கம் இனிமேல் அவதானமாக அடுத்த கட்டத்துக்குள் பிரவேசிக்க இருப்பதாகவும் எத்தகைய தடைகள் அழுத்தங்கள் வந்தாலும் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வைப் பெற்றுக் கொடுப்பதில் தாம் பின்னிற்கப் போவதில்லை எனவும் அது பெரும்பான்மை சமூகங்களின் ஒத்துழைப்புடனும் ஆதரவுடனும் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குலகம் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் தாம் தமது நிகழ்ச்சி நிரலின் படியே நடப்பதில் உறுதியாக இருப்பதுடன், ஜெனிவா மனித உரிமைப் பேரவைக்குப் பதிலளிக்க வேண்டிய கால எல்லை இவ்வருடம் அக்கேடாபர் மாதம் வரை இருப்பதனால் அதற்கிடையில் தமது நடவடிக்கைகளைத் துரிதமாக முன்னெடுக்கவுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten