முதற்கண் மலேசிய தமிழருக்கு மனப்பூர்வ நன்றி,தொப்புள் கொடியுறவாம் இந்திய தமிழருக்கு ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று கூறி மனபார்ந்த நன்றிகள்,புலம் பெயர்ந்த உறவுகளுக்கு நன்றிகள்.தமிழரே பணத்துக்காக திசைமாறி வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்தபோது கொடுமைகளை உலகுக்கு காட்டி நியாயம் கேட்ட சனல் 4க்கு சொல்லில் அடங்கா நன்றிகள்,உலகை அடக்கியாளும் அமேரிக்கா ஓரளவாவது நம்மில் இரக்கம் கொண்டதே அதற்காக அவர்களுக்கு நன்றி,எதுவுமே செய்யாமல் யாரோ செய்தவற்றை தாமே செய்ததாக கருத்தெழுதும் இருந்ததையும் இழக்கச் செய்தவர்கள் மத்தியில் சொந்த இனத்தின் கொலைவெறியை வெளிப்படுத்த உதவிய அந்த கமராக்களுக்கு(ஒளிப்பட ,புகைப்பட உரிமையாளர்கள்)உரிய ராணுவ வீரருக்கு நன்றி.உண்மையான மனிதாபிமானம் மீண்டும் உதிக்க நீங்கள் தொடர்ந்து உழைப்பதுடன் மனிதத்தை எதிர்த்தவர்களை மனிதராக்க முயற்சிக்கவும் வேண்டி அதற்கான நன்றிகளை இப்போதே கூறிக்கொள்கின்றேன்
.யுத்த மீறல்களுக்கு ஆதரவளித்த நாடுகள் பற்றியும் அந்நாட்டு மக்களின் நிலை பற்றியும் எண்ணவே திகிலாக உள்ளது,அம்மக்களுக்கும் இப்படி ஒரு கொடுமை நடக்க முதல் அவர்களை காக்க ஐக்கிய நாடுகள் சபையை வேண்டிக்கொள்கின்றேன்.நடுநிலை வகித்தவர்களும் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்!இந்தியா உண்மையில் காந்திதேசமாக மாறவேண்டும்,தனதெல்லைக்குள் வாழும் மக்களை பயங்கர வாதிகள் என்று கொல்வதையும் கற்பழிப்பதையும் தடை செய்யவேண்டும்,உண்மை நண்பரை,உறவுகளை அடையாளம் காணும் அறிவு இந்திய மண்ணில் வளர வேண்டும்.இல்லையென்றால் இந்தியா உடைவதற்கு அவர்களே காரணமாகும்.இந்திரா அம்மையாரினை போல அரசியல் சாணக்கியம் உள்ள ஒருவரே இந்தியாவுக்கு தேவை,காந்திகள் உதயமாக வேண்டும்.இங்கு பிரேரணை தோற்றிருந்தால் தமிழர் என்றொரு இனமே இல்லாதொழிக்கப் பட்டிருக்கும்,எஞ்சியவர்களும் சிங்களவராக இலங்கையிலும் மற்ற நாடுகளில் அந்தந்த நாட்டு பிரஜைக்களுமாயிருப்பர்.அந்த துயர நிகழ்விலிருந்து தற்காலிக விடுதலை தந்த அனைவருக்கும் நன்றிகள் பலகோடிகள்!
இலங்கைக்கு ஆதரவாக எதிராக வாக்களித்த நாடுகளின் முழு விபரம் இணைப்பு!!
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸில் 19வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் ஐக்கிய அமெரிக்கா முன்வைத்த பிரேரணை பெரும்பான்மை நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வாக்களித்த நாடுகளின் முழு விபரம் வருமாறு:
இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகள்:-
01.அவுஸ்திரேலியா
02.பெல்ஜியம்
03.பெனின்
04.கெமரூன்
05.சிலி
06.கொஸ்டரீக்கா
07.செக் குடியரசு
08.கோத்தமாலா
09.ஹங்கேரி
10.இந்தியா
11.இத்தாலி
12.லிபியா
13.மொரிடஸ்
14.மெக்சிகோ
15.நைஜீரியா
16.நோர்வே
17.பெரு
18.போலந்து
19.மோல்டோவா
20.ரோமானியா
21.ஸ்பெயின்
22.சுவிட்ஸர்லாந்து
23.ஐக்கிய அமெரிக்கா
24.உருகுவே
இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்:-
01.பங்களாதேஷ்
02.சீனா
03.கொங்கோ
04.கியூபா
05.ஈக்குவாடோர்
06.இந்தோனேசியா
07.குவைத்
08.மாலைத்தீவு
09.மைவுரிடானியா
10.பிலிபைன்ஸ்
11.கட்டார்
12.ரஸ்யா
13.சவுதி அரேபியா
14.தாய்லாந்து
15.உகாண்டா
வாக்களிக்காத நாடுகள்:
01.அங்கோலா
02.போர்சுவானா
03.பேர்கினா பசோ
04.ஜிபூடி
05.ஜோர்தான்
06.கிர்கிஸ்தான்
07.மலேசியா
08.செனகல்
Geen opmerkingen:
Een reactie posten