கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளில், ஏற்றுக்கொள்ளக் கூடிய பரிந்துரைகள் மட்டும் அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட மாட்டாது என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டிய அவசியமும் கிடையாது.
தேசிய அல்லது சர்வதேச ரீதியான அழுத்தங்களுக்கு அடிபணிந்து கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த அரசாங்கம் தயாரில்லை.
ஆணைக்குழு பரிந்துரைகள் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும், இது நடைமுறைச் சாத்தியமற்றது.
ஏற்றுக்கொள்ளக் கூடிய மற்றும் நடைமுறைச் சாத்தியமுடைய பரிந்துரைகள் மட்டும் அமுல்படுத்தப்படும். உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டமே முன்வைக்கப்படும்.
இந்தியா அல்லது வேறும் உலக நாடுகளின் அழுத்தங்களுக்காக தீர்வுத் திட்டங்களை முன்வைக்கத் தயாரில்லை.
நல்லிணக்க ஆணைக்குழுவின் சில பரிந்துரைகள் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டுள்ளது. பரிந்துரைகள் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட முடியாது.
மக்களுக்கும் நாட்டுக்கு நன்மை அளிக்கக் கூடிய தீர்வுத் திட்டங்கள் அமுல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten