ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடரில், இலங்கைக்கெதிரான இந்த முடிவைப் பெறுவதற்காக பிரித்தானியா கடுமையாக உழைத்தது என பிரித்தானியாவின் வெளிவிவகாரப் பணியக அமைச்சர் ஜெரிமி பிறவுண் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று லண்டனில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் ஜெரிமி பிறவுண் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை பிரித்தானியா வரவேற்றுள்ளதுடன், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளது.
உலகில் உள்ள அரசாங்கங்கள் இலங்கையில் நீடித்த அமைதியையும் நல்லிணக்கத்தையும் விரும்புகின்றன என்பதை இந்தத் தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது.
எனவே, விரைவில், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். என்றும் ஜெரிமி பிறவுண் தெரிவித்துள்ளார்.
வெள்ளிடைமலைபோல தெரியும் ஒரு பாரிய யுத்தக் குற்றம் வீடியோ மூலமும் புகைப் படங்கள் மூலமும் நிரூபணமான பின்னும் அவ்வரசாங்கம் நியமித்த நல்லிணக்கக்குழுவினால் ஒப்புக்கொள்ளப்பட்டு பரிந்துரை செய்யப்பட்ட தீர்வுகள் கொடுக்கப்படவில்லை,அவையே பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருப்திகரமான தீர்வல்ல.ஐக்கிய நாடுகள் சபையின் தீர்வோ வேறு.சாதாரண தங்களாலேயே கொடுக்கப்பட்ட்ட தீர்வையே நிறைவேற்றாத அரசாங்கத்துக்கு எதிராக ஒரு தீர்மானம் மனிதாபிமான,மனித உரிமைத் தீர்மானம் நிறைவேற்றவே மிகக்கடுமையாக போராட வேண்டியுள்ளது.இதில் இலங்கையில் அமைதி வந்து விட்டது,சட்டம் ஒழுங்கு நிலவுகிறது என்கிறார்கள்.மனித உரிமை மீறல்கள் நடை பெறுவதாக அதற்குரிய உலக சேவை நிறுவனங்கள் அறிக்கைகள் கொடுத்தன. மனித உரிமைகளை மதிக்காத ஒரு நாட்டுக்கு ஆதரவு கொடுத்த நாடுகள் பற்றி என்ன சொல்வது,அங்குள்ள மக்கள் பாவம் என்றுதான் சொல்லணும்.இன்னும் அங்கு பிரச்சனைகள் இடம் பெறுவதை ஒப்புக்கொண்ட நாடுகள் கூட அகதிகளை அடிச்சுப்பிடிச்சு அங்கு இரவோடு இரவாக அனுப்பிவைக்கின்ற கொடுமையை யாரிடம் சொல்வது.தீதிமன்றங்கள் வெளிநாட்டு அமைச்சினால் தீர்மானிக்கப்பட்ட தீர்ப்புகளை வழங்குவது அந்நாட்டுகளின் ஜனநாயக மீறல்கள் அல்லவா??உண்மையான மனிதாபிமானம் உலகில் உருவாக நாடுகளும் மனிதாபிமானத்தை உண்மையில் பின்பற்றினால் தான் உண்டு.அரசியல்லாபங்களை கணக்குப் பார்க்கும் உலகம் மாறுமா?நாம் நிம்மதியாக வாழும் காலம் வருமா??
Geen opmerkingen:
Een reactie posten