இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் இராணுவத்தினர் இழைத்த போர்க் குற்றங்களை மறைக்க இந்தியாவே தயாரிக்கும் திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் நடந்தேறிய விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை இராணுவத்துக்கும் இடையேயான இறுதிக்கட்ட சமரில், பெருந்தொகையான தமிழ் மக்கள் காட்டுமிராண்டித்தனமான சிங்கள இராணுவத்தால் கொடுமைபடுத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவங்களை இங்கிலாந்து ஊடகமான சனல் 4 தொலைக்காட்சி உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது.
இத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காட்சிகளை பொய்யாக்கும் வகையில், இலங்கைக்கு ஆதரவாக புதிய காணொளி ஒன்றை தயாரிக்க இருக்கிறது இந்திய வெளிவிவகார அமைச்சு.
இலங்கையுடனான நட்புறவை பலப்படுத்தும் வகையில் இக்காணொளி அமையவுள்ளது.
இந்தியாவிலுள்ள மிகப்பிரபலமான இயக்குனர்களை அழைத்த இந்திய வெளிவிவகார அமைச்சு அவர்கள் மூலம் இக்குறும்படத்தை இயக்கவுள்ளது.
யாழ்ப்பாணம் என பெயர் சூட்டப்பட்ட இக்குறும்படத்தை இயக்குனர் சூஜித் செர்கர் இயக்க பொலிவூட்டின் மிக பிரபலமான நடிகர் ஜான் ஆப்ரஹாம் நடித்துள்ளார்.
இதற்காக அங்கு நிலவும் சூழ்நிலைகளை தெரிந்து கொள்வதற்காக அடிக்கடி இலங்கையின் தமிழ் பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் நடிகர் ஜான் ஆப்ரஹாம்.
இக்குறும்படத்தை தயாரிப்பது தொடர்பாக சென்ற வருடமே முடிவு எடுக்கப்பட்ட நிலையில், இதன் முழு தயாரிப்பு செலவினங்களை கொழும்பிலுள்ள இந்திய தூதகரமே ஏற்றுள்ளது.
இப்போரினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் தமிழ் பிரதேசங்களான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை போன்ற பிரதேசங்களுக்கு விஜயம் செய்த படக்குழுவினர் அம்மக்களோடு பேசிப் பழகத் தொடங்கியுள்ளனர்.
மக்களோடு பேசும்போது இறுதிக்கட்ட யுத்தம் பற்றிய எந்த விடயமும் பேசக்கூடாது என்று படக்குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்தியாவால் பயனுறும் தமிழ் பயனாளர்களின் பேட்டிகள் மட்டுமே அக்குறும்படத்தில் இடம்பெற்றுள்ளது. அதிகமான மக்கள் படக்குழுவினரோடு பேசுவதை தவிர்த்ததாக கூறினர் படக்குழுவோடு சம்பந்தப்பட்டவர்கள்.
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பேட்டியும் அக்குறும்படத்தில் அமையவுள்ள நிலையில், அதற்கான வேலைகள் இன்னும் பூர்த்தியாகவில்லை.
இதேவேளை இந்திய தலைநகர் டில்லி வந்த மேற்படி படக்குழுவினர் தங்கள் குறும்படத்தின் விநியோகம் சம்பந்தப்பட்ட வேலைகளை முடுக்கி விட்டுள்ளனர்.
இலங்கை போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும், அனைத்து மீள் அபிவிருத்திகளையும் இந்திய அரசு செய்துவருகிறது.
அதன்மூலம் தமிழ் மக்கள் இந்திய அரசை மிக நன்றியுடன் உற்றுநோக்குவதாக உலக நாடுகளுக்கு பிரச்சாரம் செய்வதே இந்திய அரசின் நோக்கமாகும்.
அதன்மூலம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் சிங்களவர்களுடன் இணைந்து வாழ முடியும் என்றும் அவர்களுக்கு தனி ஈழம் என்பது தேவைப்படவில்லை என்பதையும் வெளி உலகுக்கு எடுத்துரைக்கவே மேற்படி குறும்படத்தை தயாரித்துள்ளது இந்திய அரசு.
முதலில் மேற்படி குறும்படத்தை இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், அரசியல் நிபுணர்களுக்கும் காண்பிக்க உள்ளதாக கூறியுள்ளனர் இந்திய வெளிவிவகார அமைச்சை சேர்ந்தவர்கள்.
Geen opmerkingen:
Een reactie posten