தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 19 maart 2012

பீரிஸின் காலை வாரிய ஆபிரிக்க நாடுகள்! இலங்கைக்கெதிரான தீர்மானத்துக்கு நைஜீரியாவும் கெமரூனும் ஆதரவு!


ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கெதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை தோற்கடிக்க, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆபிரிக்க நாடுகளுக்கு மேற்கொண்ட பயணம் வெற்றியளிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட இலங்கைக்கெதிரான தீர்மானத்தை ஆபிரிக்க நாடான கெமரூன், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கலாம் என்று முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், கடந்தமாத பிற்பகுதியில் ஜெனிவா சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அங்கிருந்து ஆபிரிக்க நாடுகளுக்கு திடீர் பயணத்தை மேற்கொண்டு, இலங்கைக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
முதலில் உகாண்டாவுக்கும் பின்னர், நைஜீரியா, தென்னாபிரிக்கா, கெமரூன் உள்ளிட்ட ஆபிரிக்க நாடுகளுக்கும் அவர் பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டினார். கெமரூன் பிரதமர் பிலெமொன் யாங் மற்றும் நைஜீரிய வெளிவிவகார அமைச்சர் ஒலுக்பெங்கா அயோடேஜி அசிருவுடனும் பீரிஸ் பேச்சுக்களை நடத்தினார்.
ஆனால், வெளிவிவகார அமைச்சரினால் எதையும் சாதிக்க முடியாது போயுள்ளது என்பது உறுதியாகியுள்ளது. பீரிஸின் கோரிக்கைகளை புறக்கணித்து விட்டு, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்க கெமரூனும், நைஜீரியாவும் முன்வந்துள்ளன.

Geen opmerkingen:

Een reactie posten