தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 20 maart 2012

இன்றைய இரு உப நிகழ்வுகளில் இலங்கைக்கெதிராக கடும் குற்றச்சாட்டுக்கள்: முகத்தைசுழிக்க வைக்கும் நாகரிகமற்ற செயற்பாடுகளில் அரச குழுவினர் !


ஜெனிவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இன்று இடம்பெற்ற இரு உப நிகழ்வுகளில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதுடன் அங்கு கலந்து கொண்டிருக்கும் அரச குழுவினரின் நாகரிகம் அற்ற செயற்பாடுகள்குறித்தும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பிரித்தானிய தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பில், தொடர்ச்சியாக இந்த கூட்டத் தொடரில் கலந்துகொண்டிருக்கும் கனேடிய தமிழர் காங்கிரஸ் ( Canadian Tamil Congress), அமெரிக்க தமிழ் அரசியல்செயலவை ( United States Tamil Political Action Council), பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு (Tamil Youth Organisation United Kingdom) ஆகிய அமைப்புக்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் இன்றைய இந்த இரு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தவேளை அரச பிரதிநிதிகள் அவர்களுடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் அவை நாகரிகத்திற்கு முரணாகவும் நடந்துகொண்டனர்.
பேரவையின் 21ம் இலக்க அறையில் நடைபெற்ற முதலாவது உப நிகழ்வு அரச சார்பற்ற நிறுவனங்களின்பிரதிநிதிகளை ஐ .நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சந்திக்கும்வகையில் அமைந்திருந்தது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் , இலங்கையில்அரசசார்பற்ற நிறுவனங்களின் மீது அரசாங்கம் கெடுபிடி நடவடிக்கைகள் மற்றும் அச்சுறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அதேபோல் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரிலும் கூட சிவில் அமைப்புக்களின் உறுப்பினர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் மீது அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டினர்
இது தொடர்பில் தனது கவலையை தெரிவித்த நவநீதம்பிள்ளை அவ்வாறான செயற்பாடுகள் நடைபெறாத வண்ணம் இலங்கை பார்த்துக்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தியதுடன் இது தொடர்பில் ஏற்கனவே தான் ஆணைக்குழுவின் தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பதாகவும் இலங்கை குழுவினரை கண்டித்து ஒரு கடுமையான அறிக்கையினை வெளியிடுவதற்கு ஆவன செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.
பேரவையின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருக்கும் மனித உரிமைகள் ஆர்வலர்களது குடும்பங்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தல்கள் குறித்தும் தான் கவலை கொண்டிருப்பதாகவும் நவநீதம்பிள்ளை இதன்போது தெரிவித்தார்.
"இலங்கையில் மனித உரிமைகள்" என்ற தலைப்பில் 23 வது இலக்க அறையில் நடைபெற்றஇரண்டாவது உப நிகழ்வினை 'ஆபத்துக்குள்ளான மக்களின் சர்வதேச சமூகம்' மற்றும் 'சிறுபான்மையினரின் உரிமைகளுக்கான குழு' ஆகிய அமைப்புக்கள் இணைந்து ஒழுங்குசெய்திருந்தன.
இந்த நிகழ்வில் இலங்கையில் காணாமல் போன சிங்கள ஊடகவியலாளரான பிரகீத்எக்னலியகொடவின் மனைவி சந்தியா உரை நிகழ்த்தினார். தனது கணவர் தொடர்பில் இதுவரை எந்ததகவலும் இல்லை என்றும் ஆனால் இலங்கை அரசாங்கம் தனது கணவர் தொடர்பில் பொய்யான கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
சந்தியா உரை நிகழ்த்தியது குறித்து மிகவும் கொதிப்படைந்த இலங்கை அரச பிரதிநிதிகள், அவரதுகருத்துக்களுக்கு மறு கருத்துக்களை தெரிவித்ததுடன், அவரை இகழும் வகையிலும் கேலி செய்யும்வகையிலும் நாகரிகமற்ற வகையிலும் தரக்குறைவான வகையிலும் நடந்து கொண்டனர்.
இது இந்தகூட்டத்தில் கலந்து கொண்டவர்களை முகம் சுழிக்க வைத்ததுடன் அதிருப்தி கொள்ளவும் செய்ததது. அமைச்சர் ரிசாத் பதியூர்தின் , அருண் தம்பிமுத்து உட்பட பல அரச பிரதிநிதிகள் இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை, கூட்டத்தொடரில் கலந்து கொண்ட பிரித்தானிய பழைமைவாத கட்சியை ( Conservative Party ) சேர்ந்தவரும் பிரித்தானியாவின் தமிழர்களுக்கான சர்வ கட்சி பாராளுமன்ற குழுவின் (All-Party Parliamentary Group for Tamils) தலைவருமான லீ ஸ்காட் (Lee Scott) பாராளுமன்ற உறுப்பினர், இலங்கைக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் சர்வதேச ரீதியான சுயாதீன விசாரணை ஒன்றை வலியுறுத்தியும் இதன் ஒரு படியாக இலங்கை மீதான அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்கவலியுறுத்தியும் பல ராஜதந்திர சந்திப்புக்களை நடாத்தியிருக்கிறார்
ஏற்கனவே, பிரித்தானியதமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பில் பிரித்தானியாவின் தமிழர்களுக்கான சர்வ கட்சி குழுவைச் சேர்ந்ததொழில் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன் மான் (John Mann), சிவோன் மாக் டொனா (Siobhain McDonagh ) மற்றும் சுதந்திர ஜனநாயக கட்சியை சேர்ந்த டோம் பிரேக் (Tom Brake) ஆகியோர் பல உயர் மட்ட சந்திப்புக்களை மேற்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவளை, பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன்மிகவும் உயர் மட்ட சந்திப்பொன்றை நடாத்தியிருக்கின்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten