தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 26 maart 2012

கை, கால்களை உடைப்பேன் என்ற மேர்வின் சில்வாவின் கருத்தை மன்னிக்க முடியாது!- ஜீ.எல்.பீரிஸ் !


[ வீரகேசரி ]
ஊடகவியலாளர்களின் கை, கால்களை உடைப்பேன் என மேர்வின் சில்வா வெளியிட்ட கருத்தினை மன்னிக்க முடியாதென வெளி நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக வெளிநாடுகளுக்குச் சென்று கருத்துகளைக் கூறும் ஊடகவியலாளர்கள் நாட்டுக்குள் கால்வைத்தால் அவர்களின் கை, கால்களை உடைப்பேன் என பொதுமக்கள் உறவுகள் அமைச்சர் மேர்வின் சில்வா அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார்.
இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள பீரிஸ், மேர்வினின் இக்கருத்தை மன்னிக்க முடியாது என்பதுடன் கண்டிக்கத்தக்கது எனவும் கூறியுள்ளார்.
எவராக இருந்தாலும் வன்முறையில் செயற்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
தனிப்பட்ட ஒருவரின் இவ்வாறான கருத்தை சர்வதேச சமூகம் அரசாங்கத்தின் ஒட்டுமொத்த நிலைப்பாடாக எடுத்துக்கொள்ளக் கூடாது எனவும் ஜி.எல். பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten