தமிழீழ விடுதலைப் புலிகள் பிரசார நோக்கில், திரிபுபடுத்தப்பட்ட காணொளிகளை தயாரித்ததாக புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியில் அனுதாபம் திரட்டும் நோக்கில், புலிகள் இவ்வாறு போலியான ஆவணப்படங்களை வெளியிட்டனர்.
2002ஆம் ஆண்டு போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காலத்திலும் போலியான காணொளிகள் தயாரிக்கப்பட்டு, சர்வதேச சமூகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.
புலிகளினால் தயாரிக்கப்பட்ட போலி காணொளிகளின் காட்சிகளையே சனல் ஊடகம் பயன்படுத்தியுள்ளது. இறுதிக் கட்ட போரின் போது புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனுக்கு, கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
தப்பிச் செல்ல முற்பட்ட போது புலி உறுப்பினர்கள், பாலசந்திரன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம் என தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தொலைக்காட்சி அலைவரிசையான சுயாதீன தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர் காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten