[ வீரகேசரி ]
இலங்கையிலிருந்து ஜெனீவா சென்ற பாக்கியசோதி சரவணமுத்து உட்பட அரச சார்பற்ற பிரதிநிதிகளின் வங்கிக் கணக்குகளை சோதனை செய்வதற்கும் அவர்களை விசாரணை செய்வதற்கும் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இனவாத அமைச்சர் விமல் வீரவன்ச வேண்டுகோள் விடுத்தார்.
இவர்களுக்கு விடுதலைப் புலி ஆதரவாளர்களான புலம்பெயர் தமிழர்களா அல்லது அமெரிக்காவா பணம் வழங்குகிறது என்பதனையும் ஆராய வேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அமைச்சர் விமல் வீரவன்ச இதனைத் தெரிவித்தார்.
இங்கு அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஜெனீவாவில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டுவந்தபோது அங்கிருந்து கொண்டு நாட்டுக்கு எதிராக செயற்பட்ட பாக்கியசோதி சரவணமுத்து, சுனீலா அபயரட்ன, சுனந்த தேசப்பிரிய, நிமல்கா பெர்னாண்டோ, வெலியன ஆகியோர் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
ஜெனீவாவுக்கு செல்வதற்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தூங்குவதற்கும் சுக போகம் அனுபவிப்பதற்கும் இவர்களுக்கு யார் பணம் வழங்கினார்கள்.
புலம்பெயர் தமிழ் புலி ஆதரவாளர்களா அல்லது அமெரிக்காவா என்பதை ஆராய வேண்டும்.
இவர்களது வங்கிக் கணக்குகள் அனைத்தும் சோதனை செய்யப்பட வேண்டும். மத்திய வங்கி இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசாங்கம் இவ்விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten