இந்தியர்கள் தனது சகோதரர் பசில் ராஜபக்சவை ஒரு கோமாளியின் நிலைக்கு கீழ் இறக்கி விட்டார்கள் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.ஜெனிவா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளித்த பின்னர், சீர்குலைந்துள்ள இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மீளக்கட்டியெழுப்புவதற்கு சிறிலங்கா அதிபரின் சிறப்பு தூதுவராகப் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கு சிறிலங்கா அதிபரிடம் அனுமதி கேட்டுள்ளார் பசில் ராஜபக்ச.
அதற்கு சிறிலங்கா அதிபர் அனுமதி வழங்க மறுத்து விட்டார்.
ஜெனிவா தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட முன்னதாக அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களிக்காது என்றும், நிலைமை மோசமாக இருந்தால், வாக்களிப்பில் பங்கேற்காது என்றும் பசில் ராஜபக்ச கூறியிருந்தார்.
உயர்மட்டத் தொடர்புகள் மூலம் தனக்கு இந்த விபரங்கள் தெரியவந்ததாக பசில் ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார்.
இதனை பசில் ராஜபக்சவுக்கு ஞாபகப்படுத்திய சிறிலங்கா அதிபர், இந்தியர்கள் பசிலை கோமாளியாக்கி விட்டதாக ஏளனமாக கூறியுள்ளார்.
அத்துடன், எந்தவொரு ராஜபக்சவுடனும் இந்தியா பேச விரும்பவில்லை என்று கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் தகவல் அனுப்பியுள்ளது.
வேண்டுமானால் சிறிலங்கா அரசு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை அனுப்ப முடியும் என்றும் இந்தியா தகவல் அனுப்பியுள்ளதமாகவும் பசில் ராஜபக்சவுக்கு, சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார். |
Geen opmerkingen:
Een reactie posten