தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 21 maart 2012

ஐக்கிய நாடுகள் சபையில் இந்துவாக மாறிய மஹிந்தர்!


இந்துத்துவத்தை ஏற்றுக் கொண்ட தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஐக்கிய நாடுகள் சபை முன்பாக காட்டப்பட்டு உள்ளார்.
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படுகின்றமையை ஆட்சேபித்து ஐரோப்பிய நாடுகளில் வாழ்கின்ற தேசபக்தர்கள் ஏராளமானோர் அப்பேரவையின் ஜெனிவா அலுவலகம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நேற்று முன் தினம் மேற்கொண்டு இருந்தார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்துத் தரப்பினரதும் கவனத்தை ஈர்த்தவராக சுவிற்சலாந்தில் வசித்து வருபவரும், இந்து – பௌத்த சங்க தலைவருமான தமிழர் இருந்து உள்ளார். இவர் வேட்டி, சால்வை, சட்டை அணிந்து சைவ கோலத்தில் தோன்றி இருந்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நல்லூர் ஆலயத்தை தரிசிக்க சென்று இருந்தபோது தீபத்தை தொட்டுக் கும்பிட்டபோது எடுக்கப்பட்ட புகைப்பட காட்சியை கொண்ட கட் அவுட் ஒன்றை கைகளில் இவர் ஏந்தி நின்றார்.
ஆயினும் இலங்கை அரசுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று இருந்த கத்தோலிக்கர்கள் பலரின் மத்தியிலும் இவ்விடயம் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

Geen opmerkingen:

Een reactie posten