தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 maart 2012

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து விலகவில்லை: பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம்!


இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இராஜினாமா செய்துள்ளார் எனவும் ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மை இல்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர், பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
எனினும், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஜனாதிபதிக்கு தனது இராஜினாமா கடிதத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்ததாகவும் அதனை ஏற்க ஜனாதிபதி மறுத்து விட்டதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கிய உறுப்பினர்கள் பலர் தெரிவித்தனர்.

Geen opmerkingen:

Een reactie posten