கடந்த புதன்கிழமை வெளியான கொலைக்களங்கள் பாகம் இரண்டில், பிரித்தானிய முன்நாள் பாதுகாப்பு அமைச்சரின் செவ்வியும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 2009ம் ஆண்டு போர் உச்சக்கட்டத்தை எட்டியவேளை, இலங்கை சென்ற பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மிலபான் அவர்கள், மகிந்த சகோதரர்களைச் சந்தித்தார். பின்னர் அவர் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவருடன் உரையாடும்போது, மகிந்தர், கோத்தபாய, மற்றும் இராணுவத்தளபதிகள் அனைவரும் பொய்சொகிறார்கள் என்றும் இவர்கள் எல்லாம் பொய்யர்கள் என்றும் வர்ணித்துள்ளார். இந்த உரையாடலை அமெரிக்கத் தூதுவராலயம் தனது தலைமைக்கு பாதுகாப்பான கேபிள் மூலம் அனுப்பிவைத்துள்ளது.
விசிலடிக்கும் விக்கி லீக்ஸ் சும்மா இருக்குமா ? அவர்கள் 2009ம் ஆண்டு கைப்பற்றிய இத் தவகல்களை தற்போது வெளியிட்டுள்ளனர். இதனை சனல் 4 தொலைக்காட்ச்சி பெற்று, தனது கொலைக்களங்கள் ஆவணப்படத்தில் வெளியிட்டுள்ளது. பிரித்தானிய முன்நாள் பாதுகாப்பு அமைச்சரின் இந்தக் கூற்று பகிரங்கமானதால், கோத்தபாய கடும் ஆத்திரமடைந்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு கொடுத்த செவ்வியில், அவர் டேவிட் மிலபானைப் போட்டுத் தாக்கு தாக்கு என்று தாக்கியுள்ளார். டேவிட் மிலபான் அங்கம் வகிக்கும் லேபர் கட்சியானது 2009ம் ஆண்டு தேர்தலில் தோல்வியின் விழிம்பில் இருந்ததாகவும், லண்டனில் வசிக்கும் 3 லட்சம் தமிழர்களின் வாக்குகளைப் பெறவே டேவிட் மிலபான் இவ்வாறு புலிகளுக்குச் சார்பாகப் பேசினார் என்றும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர், மற்றும் மூத்த இராணுவத் தளபதிகளை இவர் எவ்வாறு பொய்யர்கள் என வர்ணிக்க முடியும் எனவும் அவர் கடுந்தொணியில் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் நேர்காணலைக் கண்ட நிருபரோ விட்டபாடாக இல்லை. தொடர்ந்தும் கோத்தபாயவிடம் ஆத்திரமூட்டும் கேள்விகளைத் தொடுத்தார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த கோத்தபாய மேலும் சில வார்த்தைகளைக் கொட்டித் தீர்த்தார். விடுதலைப் புலிகளுக்கு உயிரோட்டம் கொடுக்கவே டேவிட் மிலபான் விரும்புவதாகவும், 2009ம் ஆண்டு காலப்பகுதியில் டேவிட் மிலபான் 60% தமான தனது நேரத்தை புலம்பெயர் தமிழர்களுக்காவே செலவிட்டார் எனவும் கூறியுள்ளார். கோத்தபாய இவ்வாறு தெரிவித்துள்ள கருத்துக்கள், பிரித்தானிய தொழில்கட்சியை(லேபர்) மேலும் ஆத்திரமூட்டியுள்ளது. பிரித்தானிய தொழில்கட்சியின் தலைவர் எட் மிலபானின் சொந்தச் சகோதரரே டேவிட் மிலபான் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
பிரித்தானியாவில் தற்போது கான்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியில் உள்ளது. லேபர் கட்சி எதிர்கட்சியாக உள்ளது. ஆனால் ஆட்சி மாற்றம் ஒன்று வரும் பட்சத்தில், டேவிட் மிலபான் போன்ற அரசியல்வாதிகள் மிகவும் சக்திமிக்கவர்களாக வருவார்கள். அப்போது இலங்கை மேலும் நெருக்கடிக்குள் தள்ளப்படும் என்பதனை கோத்தபாய இன்னும் உணரவில்லைப் போலும் !
Geen opmerkingen:
Een reactie posten