தமிழின அழிப்புப் போரில் குறிப்பாக முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களினது விபரங்களையும் மற்றும் தமிழினத்திற் கெதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பான பல்வேறு ஆதார பூர்வமான விபரங்களையும் திரட்டி, மனித உரிமை அமைப்புகள், ஊடகங்கள் மற்றும் முடிவெடுக்கும் ஆட்சிப் பீடங்களிற் கூடாக பிரித்தானிய தமிழர் பேரவை எமது மக்களின் விடிவு நோக்கிய செயற்பாடுகளை நகர்த்தி வருகின்றது. முள்ளிவாய்க்கால் வரை படுகொலை செய்யப்பட்ட மக்களது மறைக்க முடியாத உண்மைகளை திரட்டி மே 2009 இற்கு முன்னரும் (2006 இல் இருந்து) அதற்குப் பின்னர் இன்றுவரை பிரித்தானியாவில் மட்டுமல்லாது உலகின் பல்வேறு அரங்கங்களில் நாம் வெளிப்படுத்தி வருவது யாவரும் அறிந்ததே.
மே 2010ல் முள்ளிவாய்க்கால் முதலாவது ஆண்டு நினைவு கூரல் நிகழ்வினையும் அதனைத் தொடர்ந்து 2011ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நிகழ்வினையும் தொடர்ச்சியாக பிரித்தானிய தமிழர் பேரவை நடத்தி வருகின்றது. இந்தப் பின்னணியில் பிரித்தானிய தமிழர் பேரவையானது இந்த வருட 2012 முள்ளிவாய்க்கால் நினைவு கூரல் நிகழ்விற்கான ஏற்பாடுகளை திட்டமிட்டு சிறப்பாக முன்னெடுத்து வருகின்றது.
எனினும் நேற்று 27 ஆம் திகதி ஒரு சில ஊடகங்களில் வெளிவந்த அறிக்கைக்கும் பிரித்தானிய தமிழர் பேரவைக்கும் எந்த வித தொடர்புமில்லை எனவும் இது தொடர்பாக அறிக்கையை வெளியிட்ட அமைப்பு பிரித்தானிய தமிழர் பேரவையுடன் எந்தவித சந்திப்புக்களையும் நடத்தவில்லை என்பதையும் மக்களுக்கு அறிவிப்பதோடு, பிரித்தானிய தமிழர் பேரவையினால் உத்தியோக பூர்வமாக வெளியிடப்படாத எந்த ஒரு அறிக்கை குறித்தும் மக்கள் விழிப்பாக இருக்குமாறும் பிரித்தானிய தமிழர் பேரவை கேட்டுக் கொள்கின்றது.
அண்மைக்காலமாக பிரித்தானிய தமிழர் பேரவைக்கு பல்வேறு தரப்பிலும் உள்ள நற்பெயரை உபயோகிக்கும் நோக்கத்துடன் ஒரு சில அமைப்புக்களும், தனிநபர்களும் பிரித்தானிய தமிழர் பேரவையின் பெயரை பயன்படுத்தி மக்களிடையே பரப்பப்படும் வதந்திகள், குறுஞ்செய்திகள் (ஸ்Mஸ்), மின்னஞ்சல் தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை வன்மையாக கண்டிப்பதுடன், பிரித்தானியாவிலும், அனைத்து நாடுகளிலும் உள்ள மக்கள் விழிப்பாக இருக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம். இவை பற்றி விளக்கங்கள் தேவைப்படின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
0208 808 0465
0792 702 3912
0782 544 8753
பிரித்தானிய தமிழர் பேரவை
Geen opmerkingen:
Een reactie posten