தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 26 maart 2012

இலங்கை விவகாரத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் எங்களுக்கு பாடம் கற்பிக்கமுடியாது! கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் !


'இலங்கை விவகாரத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் எங்களுக்கு பாடம் கற்பிக்கமுடியாது இந்தியா யார் என்பது எங்களுக்குத் தெரியும் பிரபாகரனை அடித்துபிடிக்க சொன்ன இந்தியா இன்று கபடநாடகம் ஆடுகின்றது' என்று கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கலாநிதி துரையப்பா நவரெட்ணராஜா தெரிவித்தார்.
கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தினால் திருக்கோவில் பிதேசத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த தங்கவேலாயுதபுரம், கஞ்சிக்குடியாறு பிரதேசங்களில் மீள்குடியேறியுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் விவசாய பயிர் நடவடிக்கையை மேற்கொள்ளுவதற்கு விவசாயிகளுக்கான நீர் இறைக்கும் இயந்திரம், முட்கம்பிகள் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
மாகாண விவசாய திணைக்கள பிரதேச விவசாய போதனாசிரியர் எம்.கோகுலராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் நவரெட்ணராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையிலே,
'கடந்த 30 வருட யுத்த நிலைமையை ஜனாதிபதி முடிவுக்கு கொண்டுவந்து யுத்தத்தின் கோரப்பிடியில் இருந்த மக்கள் சுதந்திரமாக வாழக்கூடியதாக கிழக்கு மாகாணத்தில் கோடிக்கணக்கான பணத்தை செலவழித்து பிரதேசங்களை அபிவிருத்தி செய்து வருகின்றார்.
இதனால் இன்று மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறான ஜனாதிபதியையும் நாட்டையும் காட்டிக் கொடுக்க முடியாது. இந்த நாடு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது யுத்தத்தில் இருந்து விடுவிப்பதற்கும் கிழக்கு மாகாணம் அபிவிருத்தியடைவதற்கும் கைகொடுத்தவர்கள் நாங்கள்.
அந்த வகையில் இந்த பிரதேசத்தின் அபிவிருத்தி செய்வதற்கு எங்களுக்கு அதிகாரம் இருக்கின்றது. இந்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு மத்திய அமைச்சரில் இருந்து மீள்குடியேற்ற அமைச்சர் வரை மக்களுடைய பிரச்சினையை தீர்ப்பார்கள் என்று பார்த்தபோது எவரும் மத்திய அமைச்சரில் இருந்து வரவில்லை.
ஆனால் நானும் எமது கிழக்கு மாகாண அமைச்சும் காலடி எடுத்து வைத்தோம். எங்களுக்கு நிதி தரவேண்டிய மத்திய அரசு நிதி தரவில்லை. ஆனால் இந்த பிரதேசத்திற்கு 10 கோடி ரூபாவை ஒதுக்கினோம்.
இந்த பிரதேசத்திற்கு மத்திய அமைச்சர்கள் வரும்போது இப்பிரதேசத்தை சேர்ந்த அமைச்சரான எனக்கு அழைப்பு விடுவித்திருக்க வேண்டும். அதைவிடுத்து இந்த பிரதேச செயலாளருக்கோ மீள்குடியேற்ற பிரதி அமைச்சரின் இணைப்பாளர் என சொல்லிக் கொண்டிருக்கும் சீலனுக்கு என்னைக் கூப்பிட முடியாது.
பிரபாகரனின் கீழ் இருந்தது கொண்டு நாட்டையும் இந்த தங்கவேலாயுதபுரம் கஞ்சிக்குடியாறு பிரதேசங்களை அழித்தவர்கள் இன்று சம்பிராதாயமும் வழிமுறையும் தெரியாத அமைச்சர்கள் இங்கு வந்து 400 வீடுகளுக்கு 300 வீடுகள் தருவதாக பூச்சாண்டி காட்டமுடியாது.
எனவே இந்தியாவும் அமெரிக்காவும் எங்களுக்கு பாடம் கற்பிக்கமுடியாது இந்தியா யார் என்பது எங்களுக்குத் தெரியும் பிரபாகரனை அடித்துபிடிக்க சொன்ன இந்தியா இன்று கபடநாடகம் ஆடுகின்றது' என்றார். 

Geen opmerkingen:

Een reactie posten