தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 maart 2012

காணாமற்போன கணவர் தொடர்பாகவே கருத்து கூறினேன்! நாட்டை காட்டிக்கொடுக்கவில்லை!- சந்தியா எக்னெலிகொட !!


காணாமற்போன எனது கணவர் தொடர்பில் மொஹான் பீரிஸின் கவனத்திற்கு கொண்டுசெல்லவே ஜெனிவா சென்றேன். அவ்வாறில்லாமல் நாட்டை காட்டிக் கொடுப்பதற்காக அங்கு செல்லவில்லை என காணாமற்போன ஊடகவியலாளர் ப்ரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட, தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவிற்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் பின்னர் இன்று நாடு திரும்பிய ப்ரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது ஜெனிவா விஜயம் தொடர்பாக மேலும் கூறியதாவது:
நான் ஜெனீவா சென்றிருந்தேன். 19 ஆம் திகதி ஜெனீவாவில் நடைபெற்ற பிரத்தியேக நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றேன். மாலை 4 மணியளவில் அந்த நிகழ்வில் நான் கலந்துகொண்டேன்.
அதன்போது, இலங்கையில் காணாமற் போனவர்கள் தொடர்பாக நான் கருத்து வெளியிட்டேன். நான் அவ்விடத்தில் உரை நிகழ்த்தியதன் பின்னர், மிகவும் மோசமான முறையிலேயே இலங்கை அரசாங்கம் நடந்துகொண்டது.
மொஹான் பீரிஸ் இந்த விடயம் தொடர்பாக எதனையும் கூற மறுப்பதனால், இது குறித்து அவரின் கவனத்திற்கு கொண்டுசெல்வதற்காகவே நான் அங்கு சென்றேன்.
அவ்வாறில்லாமல், நாட்டை காட்டிக் கொடுப்பதற்காக அங்கு செல்லவில்லை. எனது கணவர் தொடர்பிலான விடயங்களை அவர்கள் வெளியிட வேண்டும். அதற்காகவே நான் இவையனைத்தையும் செய்கின்றேன்.
எனினும் நான் நாட்டை காட்டிக்கொடுக்க முயல்வதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். ஏனைய நாடுகளின் அவதானம் திரும்பும் வகையில் நான் எனது செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளேன்.
இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பிலான விடயங்களை ஆராயும் குழுவின் உறுப்பினர்களையும் நான் சந்தித்தேன்.
தாம் தொடர்ந்தும் இதுகுறித்து அவதானம் செலுத்தி வருவதாகவும், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாகவும் அவர்கள் என்னிடம் கூறினர். அரசாங்கத்திடம் தொடர்ந்தும் இதுகுறித்து வினவுவதாகவும் என்னிடம் அவர்கள் குறிப்பிட்டனர். எனக் குறிப்பிட்டார்.

Geen opmerkingen:

Een reactie posten