ஐ.நாவில் அமெரிக்கா 22ம் திகதி கொண்டுவரவுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணக்கு, இந்தியா ஆதரவு தருமா... தராதா என்று பெரும் பட்டி மன்றங்கள் நடத்தப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே. இதில் படுவேகமாக அரசியல் நடத்தி சைக்கிள் காப்பில் சில அரசியல்வாதிகள் தமது இருப்பை உறுதிசெய்ய முயற்சித்தும் வருகின்றனர். இதேவேளை இன்றைய தினம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையை அரையும் குறையுமாக வாசித்த சிலர், ஆஹா இறுதியாக இந்தியாவும் இப் பிரேரணைக்கு தனது ஆதரவை வழங்கப் போகிறது என்று எண்ணிவிட்டர். அது உண்மையா ? வாருங்கள் மேட்டருக்குப் போகலாம் !
எதுக்கெடுத்தாலும் இந்தியாவைக் கேட்டுத் தான் செய்யவேண்டும் என்று அலைந்து திரியும் பல ஈழத் தமிழ் தலைவர்களும், புத்திஜீவிகளும் இதனை உடனே பெரிதாக்கி, இதுதான் சாட்டு என்று இந்தியா பிரேரணையை ஆதரிக்கப்போவதாக ஒரு பொய்யான தோற்றப்பட்டை இன்று வெளிப்படுத்தியுள்ளனர். மன்மோகன் சிங் கூறிய விடையத்தை நாம் சற்று உண்ணிப்பாகக் கவனிக்கவேண்டும். அவர் கூறியுள்ள கருத்தின்படி அமெரிக்காவானது சிறிய மாற்றைத்தைச் செய்யவேண்டும் எனக் கூறியுள்ளார். அப்படி அது சில மாற்றங்களைச் செய்யும் பட்சத்தில் அதனை இந்தியா ஆதரிக்கும் என்கிறார். அந்த மாற்றம் தான் என்ன ? ? ?
அதாவது நாம் ஒருவிடையத்தை நன்கு புரிந்துகொள்ளவேண்டும். இலங்கை அரசால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு தனது பரிந்துரைகளை மேற்கொண்டது. அமெரிக்கா அந்தப் பரிந்துரைகளை நிறைவேற்றும்படி தான் கூறுகிறது. அத்தோடு மேலும் ஒரு விடையத்தை அது சேர்த்துள்ளது அவ்வளவுதான். அதாவது இதனை இலங்கை நடைமுறைப்படுத்தும்போது, ஐ.நா மனித உரிமைப் பேரவையின் மேற்பார்வையில் அது செய்யப்படவேண்டும் என்பதாகும். இதனைத் தான் இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காரணம் விசாரணைகளில் வெளிநாடு தலையிடுவதை இலங்கை முற்றாக விரும்பவில்லை. மற்றும் இப் பிரேரணை குறிப்பிடுவதுபோல ஐ.நா அதிகாரிகள் மேற்பார்வையில் விசாரணைகள் நடைபெற்று அது திருப்த்திகரமாக இல்லை என்றால், அடுத்தவருடம் நடைபெறவுள்ள ஐ.நா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக மேலும் கடுமையான பிரேரணைகள் கொண்டுவரப்படலாம் அல்லவா.
அது சர்வதேச தலையீடுகளை மேலும் அதிகரிக்கச்செய்யும். இதனை இலங்கை ஒருபோதும் விரும்பாது. தன்னால் உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை, இலங்கை நடைமுறைப்படுத்த ஏன் தயங்குகிறது என்பது தற்போது உங்களுக்குத் தெளிவாகியிருக்கும். இதில் அமெரிக்கா ஒரு சிறிய பொறியை வைத்துள்ளது. ஆனால் தற்போது இந்திய இப் பிரேரணையில் இருந்து சில விடையங்களை நீக்கச் சொல்கிறது. அல்லது புதிதாகச் சேர்க்கச் சொல்கிறது எனலாம். அதாவது ஐ.நா அதிகாரிகள் கண்காணிப்பு தேவையில்லை என்று இந்தியா அழுத்தம் கொடுத்து, அப்படியான ஒரு பிரேரணைக்கு தாம் ஆதரவு கொடுப்போம் என்று கூறினால், அதில் எவ்வித அர்த்தமும் இல்லை பயனும் இல்லை. மீண்டும் ஒரு முறை இந்தியா தமிழர்களை ஏமாற்றி உள்ளது என்பது தான் அதன் பொருள். எனவே தற்போது இந்தியா தெரிவித்துள்ள கருத்துக்களை நாம் சரியாக விளங்கிக்கொள்ளவேண்டும்.
எதுக்கெடுத்தாலும் கண்ணை மூடிக்கொண்டு இந்திய நாமம் ஜெபம் செய்வோர் இதனைக் கவனமாகக் கையாழ்வது நல்லது ! குஞ்சமும் குடையும் கொடுத்து அதே குடையால் அடிவாங்கவும் முடியாதல்லவா ?
அதிர்வுக்காக:
வல்லிபுரத்தான்.
Geen opmerkingen:
Een reactie posten