தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 19 maart 2012

ஜெனிவாவில் இலங்கை கூட்டிய உப மாநாட்டில் இடம்பெற்ற கடும் வாக்குவாதங்கள்!


ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் பக்க நிகழ்வாக நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் இலங்கைத் தரப்பினருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபையின் ஐ.நாவுக்கான பிரதிநிதி பீற்றர் ஸ்பிளினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
இலங்கைத்  தரப்பு பக்கநிகழ்வான கூட்டத்தை கூட்டிய ஜாவிட் யூசுப், ராஜீவ விஜேசிங்க, ஜீவன் தியாகராஜா ஆகியோரை, “நாயும் குதிரைக்குட்டியும் விளையாட்டு“ விளையாடுவதாக அனைத்துலக மன்னிப்புச்சபையின் பிரதிநிதி ஸ்பிளினர் குறிப்பிட்டார்.
இதற்கு இலங்கைத் தரப்பு கோபத்துடன் பதிலளித்தது.
ஸ்பிளினரின் கருத்தை விலக்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்ட ஜீவன் தியாகராஜா, இக் கூட்டமானது  யாரையும் இகழ்வதற்கானது அல்ல என்றும், ஸ்பிளினர் தவறான முகவருக்கு பணியாற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் இரு தரப்புக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றது.
அதேவேளை, ஊடக சுதந்திரம், மனித உரிமைகள் நிலை தொடர்பாக இலங்கைத் தரப்பு வெளியிட்ட கருத்துக்களை ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய, மற்றும் கொழும்பைச் சேர்ந்த அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளான பாக்கியசோதி சரவணமுத்து, நிமல்கா பெர்னாண்டோ, சுனிலா அபயசேகர போன்றோரும் வன்மையாக மறுத்ததால் பல சந்தர்ப்பங்களில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றன.

Geen opmerkingen:

Een reactie posten