இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமரை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
இலங்கையின் இறுதிக்கட்ட போரின் போது பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் இலங்கைப் படையினரால் கொல்லப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக சட்டபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை கண்டித்து, இலங்கைக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவரவுள்ளது.
இந்த விவகாரத்தில் இந்தியா தங்களை ஆதரிக்கும் என இலங்கை அமைச்சர் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மிகவும் கவலை அளிக்கிறது.
எனவே அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரித்து, இலங்கையின் செயலுக்கு கடுமையான கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
Geen opmerkingen:
Een reactie posten