தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 11 maart 2012

பாதுகாப்பு அமைச்சின் வெள்ளை வான் கடத்தல் கும்பலை சுற்றிவளைத்​துத் தாக்க முற்பட்ட பொதுமக்கள்!


இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பில் இயங்கும் வெள்ளை வான் கடத்தல் கும்பலை பொதுமக்கள் சுற்றி வளைத்துத் தாக்கியுள்ளனர்.
நேற்றிரவு பத்து மணியளவில் கொலன்னாவை நகரசபைத் தலைவரான ரவீந்திர உதயசாந்தவை வெள்ளை வான் கடத்தல் கும்பல் கடத்திச் செல்ல முற்பட்டது. ஆயினும் எதிர்பாராத தடைகள் காரணமாக அவர்களது முயற்சி தோல்வியுற்றுள்ளது.
கொலன்னாவை நகர சபைத் தலைவரைக் கடத்திச் செல்ல முயற்சித்த போது நகர சபைத் தலைவரின் ஆதரவாளர்கள் வெள்ளைவான் கடத்தல்காரர்களை கடுமையாகத் தாக்க முற்பட்டுள்ளனர்.
எதிர்பாராத இந்த தாக்குதல் காரணமாக வெள்ளை வான் கும்பல் ஓடித்தப்ப முயற்சித்தனர். அவர்களை விரட்டிச் சென்ற நகர சபைத் தலைவரின் ஆதரவாளர்கள் கொலன்னாவைச் முச்சந்தியில் வைத்து சுற்றி வளைத்து தப்பிச் செல்ல விடாமல் தடுத்து வைத்தனர்.
அதனையடுத்து வெள்ளை வானில் வந்தோர் அங்கிருந்த பொதுமக்களை அச்சுறுத்தி தப்பிச் செல்ல மேற்கொண்ட முயற்சியும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
வெள்ளை வானில் வந்தோரில் இராணுவத்தினர் சிலரும் இருந்ததாக கொலன்னாவை பொதுமக்கள் இனம் கண்டுள்ளனர். அத்துடன் பொதுமக்கள் பிடியிலிருந்து பாதுகாக்க பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச நேரடியாக தலையிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் ஆத்திரமுற்ற கொலன்னாவை பொதுமக்கள் நேற்றிரவு 11.30மணியளவில் வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். இதில் பெருமளவான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அத்துடன் ஆத்திரம் கொண்ட பொதுமக்கள் சிலர் வெள்ளை வான் கும்பலின் வானையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.. 

Geen opmerkingen:

Een reactie posten