ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், 4ஆம் நாளான இன்று இலங்கை விவகாரம் தொடர்பாக முக்கியமானதொரு உரை இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று காலை 9 மணியளவில் சிரியா நிலைமை தொடர்பாக இரண்டு மணி நேர அவசர விவாதம் ஒன்று இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து 11 மணி தொடக்கம் 12 மணி வரையும், மாலை 3 மணி தொடக்கம் 6 மணி வரையும் உயர்மட்ட பிரதிநிதிகளின் உரைகள் மற்றும் விவாதங்களும் இடம்பெறவுள்ளது.
இதன்போது, அமெரிக்காவின் சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான இராஜாங்கத் திணைக்களத்தின் கீழ்நிலைச்செயலாளர் மரியா ஒரேரோ உரை நிகழ்த்தவுள்ளார்.
அவ்வுரையில், அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானம் குறித்த முக்கியமான தகவல்களை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவரிக்கப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தொடரில், இலங்கைக்கெதிரான தீர்மானத்தை முன்வைக்க அமெரிக்கா எடுத்துவரும் தீவிர முயற்சியை முறியடிக்கும் நோக்கில் இலங்கை அமைச்சர்கள் பல நாடுகளை இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு வேண்டுாகள் விடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten