தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 7 augustus 2011

அச்சத்தின் மத்தியில் சிங்களவர்கள் சென்னையில் இருந்து திரும்பினர் !

(வீடியோ இணைப்பு)
சென்னையில் சிங்கள யாத்திரிகர்கள் சிலர் தாக்கப்பட்டதை அடுத்து அவர்களுக்கான பாதுகாப்பை, இலங்கை துணைத்தூதரம் மேற்கொண்டது. இந்திய மத்திய அரசு இது குறித்து கவலை தெரிவித்ததோடு தமிழ் நாட்டு அரசு இது குறித்து கவனம் செலுத்தவேண்டும் என்றும் அது அறிவித்தது.


ஆனால் செல்வி ஜெயலலிதா இது குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. சிங்கள யாத்திரிகள் மீது இனந்தெரியாத குழுவொன்றினால் கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை அனுமதிக்க முடியாதென இந்திய வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகிறது. உடல் ரீதியாக தாக்கப்பட்டும் தகாத வார்த்தைப் பிரயோகத்தால் புண்படுத்தப்பட்டதுமான இச் சம்பவம் துரதிர்ஷ்டவசமான ஒன்றென இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விஷ்ணு பிரகாஸ் கூறியுள்ளார்.

இதனிடையே சென்னைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தச் சிங்களவர்கள் அனைவரும் இலங்கைக்குத் திரும்பிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் பாதுகாப்பாக இலங்கை செல்ல தூதுவராலயம் உதவிகளைச் செய்ததாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. இந்திய கடல் எல்லைக்குள் நின்று மீன் பிடிக்கும் தமிழ மீனவர்கள் பலரை இலங்கை இராணுவம் சுட்டுப்படுகொலைசெய்தது, அடித்து துன்புறுத்துத் துன்புறுத்தியது. இதன்போது வாய் திறக்காத இந்திய அரசு, சிங்களவர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது அதிர்ச்சி தருவதாக தமிழக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன
07 Aug 2011

Geen opmerkingen:

Een reactie posten