தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 18 augustus 2011

இலண்டனில் இருந்து கொழும்பு சென்ற தாயும் மகளும் கைது!

<><>
கடந்த 14 நாட்களுக்கு முன்னர் தனது பிள்ளையோடு இலங்கைக்குச் சென்ற செயல்பாட்டாளர் வாசுகி கருணாநிதியை சிறீலங்கா அரசு கைதுசெய்துள்ளது.
இவர் கடந்த 12 நாட்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளhர். அவரது மகளை தற்போது விடுவித்துள்ள சிறீலங்கா அரசு வாசுகியை தாம் எப்போது விடுவிப்போம் என்பது குறித்து தெரிவிக்க மறுத்துவருகின்றது.

பிரித்தானியப் பிரஜாவுரிமை பெற்றுள்ள வாசுகி கருணாநிதி பிரித்தானியாவில் நடைபெற்ற பல ஜனநாயக ரீதியான மனித நேய நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாசுகியை கைதுசெய்த இரகசியப் பொலிசார் அவர் பிரித்தானியாவில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில் கலந்துகொண்டதற்கான ஆதார வீடியோ ஒன்றையும் காட்டியுள்ளனர்.

சிறீலங்காவுக்கான பிரதி பிரித்தானியத் தூதுவர் இவர் கைது குறித்து சிறீலங்கா அரசுடன் பேசிவருவதாகவும் மேலும் அறியப்படுகிறது.

5 நாட்களில் அவரை விடுவிப்பதாக முதலில் சிறீலங்கா அரசு வாக்குறுதி கொடுத்தாலும், தற்போது அவரை தொடர்ந்தும் 4ம் மாடியில் தடுத்து வைத்துள்ளதாக தெரியவருகின்றது.

பிரித்தானியாவில் வட்பேட் என்னும் இடத்தில் இவர் வசித்துவந்தார். இவர் கைது குறித்து வட்பேட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தகவல்கள் சொல்லப்பட்டுள்ளது.

ஒரு பிரித்தானியப் பிரஜை ஒருவரை சிறீலங்கா அரசு இவ்வாறு கைதுசெய்து தடுத்துவைத்திருப்பது வெளியுலகிற்கு தெரியவேண்டும்.

அதுமட்டுமல்லாது சர்வதேச பெண்கள் அமைப்பு இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்கு புலம்பெயர் தமிழ் சட்ட வல்லுனர்கள் உதவவேண்டும்.

1.மனுவை அனுப்புவதற்கான முகவரி ,https://email.number10.gov.uk/Contact.aspx
2.மனு அனுப்பிய பின் உங்கள் மின்னஞ்சலுக்கு பிரதமர் அலுவலகம் அனுப்பும் இணைப்பை அழுத்தி மனுவை நிறைவு செய்ய தவறாதீர்கள்
18 Aug 2011

செயல்பாட்டாளர் வாசுகியை இரகசியமாக இலங்கை கைதுசெய்துள்ளது !
17 August, 2011 by admin
கடந்த 14 நாட்களுக்கு முன்னர் தனது பிள்ளையோடு இலங்கைக்குச் சென்ற செயல்பாட்டாளர் வாசுகி கருணாநிதியை இலங்கை அரசு கைதுசெய்துள்ளது. இவர் கடந்த 12 நாட்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. அவரது மகளை தற்போது விடுவித்துள்ள இலங்கை அரசு வாசுகியை தாம் எப்போது விடுவிப்போம் என்பது குறித்து தெரிவிக்க மறுத்துவருகின்றது. பிரித்தானியப் பிரஜாவுரிமை பெற்றுள்ள வாசுகி கருணாநிதி நாடுகடந்த அரசாங்கம் ஆரம்பிக்கப்படவிருந்த காலகட்டங்களில் அதற்கான பல உதவிகளைச் செய்தவர். அத்தோடு பிரித்தானியாவில் நடைபெற்ற பல ஜனநாயக ரீதியான மனித நேய நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வாசுகியை கைதுசெய்த இரகசியப் பொலிசார் அவர் பிரித்தானியாவில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில் கலந்துகொண்டதற்கான ஆதார வீடியொ ஒன்றையும் காட்டியுள்ளனர். இலங்கைக்கான பிரதி பிரித்தானியத் தூதுவர் இவர் கைது குறித்து இலங்கை அரசுடன் பேசிவருவதாகவும் மேலும் அறியப்படுகிறது.

5 நாட்களில் அவரை விடுவிப்பதாக முதலில் இலங்கை அரசு வாக்குறுதி கொடுத்தாலும், தற்போது அவரை தொடர்ந்தும் 4ம் மாடியில் தடுத்து வைத்துள்ளதாக தெரியவருகின்றது. பிரித்தானியாவில் வட்பேட் என்னும் இடத்தில் இவர் வசித்துவந்தார். இவர் கைது குறித்து வட்பேட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தகவல்கள் சொல்லப்பட்டுள்ளது. ஒரு பிரித்தானியப் பிரஜை ஒருவரை இலங்கை அரசு இவ்வாறு கைதுசெய்து தடுத்துவைத்திருப்பது வெளியுலகிற்கு தெரியவேண்டும். அதுமட்டுமல்லாது சர்வதேச பெண்கள் அமைப்பு இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்கு புலம்பெயர் தமிழ் சட்ட வல்லுனர்கள் உதவவேண்டும் எனவும் அதிர்வு இணையம் தாழ்மையாக வேண்டி நிற்கிறது.

Geen opmerkingen:

Een reactie posten