இரட்டையர்களாகப் பிறந்த இரு யுவதிகளுக்கு ஆள் அடையாள அட்டைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டைகள் இரண்டும் ஒரே இலக்கங்களைக் கொண்டனவாக அமைந்துள்ளன.
செப்டம்பர் மாதம் 2010 இல் வழங்கப்பட்டுள்ள இந்த அடையாள அட்டைகளுக்கு உரித்துடையவர்களான பெலிகன்கனமகே மல்கி திசானி சேனநாயக்க மற்றும் பெலிகன்கனமகே திலிக்ஸ் சேனநாயக்க ஆகியேருக்கான இரு அடையாள அட்டைகளிலும் 938121770 V. என்ற ஒரே இலக்கங்களே குறிப்பிடப்பட்டுள்ளன.
இது தொடர்பில் இந்த யுவதிகளின் தந்தை அடையாள அட்டைகள் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்திருந்தார். இதனையடுத்து அவர்களுக்கு ஓரே நாளில் புதிதாக இரு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. ஆனால் அவை இரண்டிலும் மீண்டும் ஒரே இலக்கங்களே காணப்பட்டன. |
Geen opmerkingen:
Een reactie posten