லிபிய கிளர்ச்சியாளர்கள் கடாபியின் 'பாப் அல் அஷீசியா' வளாகத்தினுள் நுழைந்து அவ்விடத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள நிலையில் அவரது வாசஸ்தலம் மற்றும் அதனுள் காணப்பட்ட வசதிகள் தொடர்பில் வெளியுலகுக்குத் தெரியவர ஆரம்பித்துள்ளது.
கடாபியின் வளாகத்தினுள் சிறார்களுக்கான பூங்கா, சிறிய மிருகக்காட்சிசாலை என்பன காணப்படுகின்றன.
கடாபியின் வாசஸ்தலத்தினுள் பெரிய நீச்சல் தடாகமொன்றும் காணப்படுகின்றது. மேலும் அங்கு நடத்தப்பட்ட தாக்குதல்களால் வாசஸ்தலத்தின் பெரும்பாலான பகுதி மற்றும் தளபாடங்கள் ஆகியன சிதைவடைந்துள்ளன.
கடந்த சில தினங்களாக அங்கு நடைபெற்றுவரும் உக்கிர மோதல்களில் சிக்கி 400 பேர் வரை கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
Geen opmerkingen:
Een reactie posten