[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஓகஸ்ட் 2011, 03:15.52 பி.ப GMT ]
ஆட்சிமாற்றத்தை உருவாக்குவது குறித்து பேச்சு நடத்த வருமாறு கிளர்ச்சியாளர்களுக்கு லிபிய அதிபர் கடாபி அழைப்பு விடுத்துள்ளார்.கடாபியின் செய்தித்தொடர்பாளரான மெளஸா இப்ராஹிம் அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனத்தின் நியுயார்க் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு இதைத் தெரிவித்தார்.
தானும், கடாபியும் இன்னும் திரிபோலியில் தான் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். எனினும் கடாபியின் இந்த அழைப்பை நேஷனல் டிரான்ஸ்சிஸ்னல் கவுன்சில் நிராகரித்துவிட்டது.
கடாபி சரண் அடையாதவரை கிளர்ச்சியாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தமாட்டார்கள் என அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர் சரண் அடைய விரும்பினால் பேச்சுவார்த்தை நடத்தி அவரைப் பிடிப்போம் என கிளர்ச்சியாளர்கள் அலுவலகத்தில் எண்ணெய் மற்றும் நிதி விவகாரங்களுக்கு பொறுப்பு வகிக்கும் அலி டர்ஹெளனி என்பவர் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten