தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 augustus 2011

தியாகச்சுடர் செங்கொடிக்கு இன்று பிரான்ஸ் - பிரித்தானியா - கனடா ஆகிய நாடுகளில் கவனயீர்ப்பு அஞ்சலி நிகழ்வு

[ செவ்வாய்க்கிழமை, 30 ஓகஸ்ட் 2011, 11:02.06 AM GMT ]
பேரறிவாளன் முருகன் சாந்தன் ஆகியோரது மரண தண்டனையை நிறுத்தக் கோரும் தொடர் போராட்டங்களின் உச்சf;கட்டமாக செல்வி செங்கொடி பரசுராம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் உலகத் தமிழ்மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
செல்வி செங்கொடியின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் தினமான இன்று 30-08-2011 செவ்வாய்க்கிழமை நாடு கடந்த அரசால் நடத்தப்படும் இந் நிகழ்விற்கு தமிழ் மக்களை இயன்றளவில் வருகை தருமாறு நாடு கடந்த அரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பிரதமர் சார்பில் அதன் சபாநாயகர் பொன். பாலராஜன் அழைப்பு விடுத்துள்ளார்.
ஸ்காபரோவில் இல. 31 புரோக்கிரஸ் வீதியில் அறை இல. 216ல் உள்ள கனடியத் தமிழர் பேரவையின் மண்டபத்தில் இடம்பெறும் இவ் வணக்க நிகழ்வில் வீர வணக்க நிகழ்வுகளும் கண்ணீர் அஞ்சலியும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செல்வி செங்கொடி பரசுராமன் அவர்களுக்கு வீர வணக்கமும்  கண்ணீர் அஞ்சலியும்
தோழர் செங்கொடிக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்ப்ட்டுள்ள அஞ்சலி நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
மலர் அஞ்சலி
30-8-2011 செவ்வாய்க்கிழமை மாலை 4:00 மணி தொடக்கம் இரவு 8:00 மணிவரை
இடம் : 31 புரோகிரஸ் அவன்யு -மண்டபம் 216  (கெனடி / புரோகிரஸ்)
கனடியத் தமிழர் பேரவை மண்டபம்
31 Progress Avenue, Suite 216 ,  Toronto, Ontario , M1P 4S6
தியாகச்சுடர் செங்கொடிக்கு இன்று பிரான்ஸ் - பிரித்தானியா - கனடா ஆகிய நாடுகளில் கவனயீர்ப்பு அஞ்சலி நிகழ்வு
பேரறிவாளன் முருகன் சாந்தன் ஆகியோரது மரண தண்டனையை நிறுத்தக் கோரும் தொடர் போராட்டங்களின் உச்சf;கட்டமாக செல்வி செங்கொடி பரசுராம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் உலகத் தமிழ்மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனொரு அங்கமாக இன்று செவ்வாய்கிழமை பிரான்ஸ் பிரித்தானியா கனடா ஆகிய நாடுகளில் வணக்க நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பிரான்ஸ் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளின் ஏற்பாட்டில் பிரான்சில் தமிழர்வர்தக மையமான லாசப்பலில் மாலை 17மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கனடா நாடுகடந்த தமிழீழ அரசாங்க மக்கள் பிரதிநிதிகளின் ஏற்பாட்டில் கனடியத் தமிழர் பேரவை மண்டபத்தில் ( 31 புரோகிரஸ் அவன்யு -மண்டபம் 216 -கெனடி - புரோகிரஸ்) மாலை 4:00 மணி தொடக்கம் இரவு 8:00 மணிவரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியா பிரித்தானிய தமிழர்களின் கூட்டிணைவில் இந்திய உயர் ஆணையத்துக்கு முன்னால்  Office Of The High Commissioner For India -WC2B 4NA -London, United Kingdom  மாலை 4மணிக்கு கவனயீர்ப்பு அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வுகளின் அனைவரும் பங்கெடுத்து மூவர் உயிர் காக்க தன்னுயிரைக் கொடுத்த பெருமகளுக்கு வணக்கம் செலுத்துமாறு அழைக்கின்றனர்.
நாதம் ஊடகசேவை
தகவல்துறை அமைச்சகம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Geen opmerkingen:

Een reactie posten