லிபியத் தலைநகர் திரிபோலியை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி அதன் ஒரு பகுதியை தம்வசப்படுத்தியுள்ளனர். 24 மணி நேரமும் ஆளில்லா அமெரிக்க வேவு விமானங்கள் லிபியா மேல் பறந்தவண்ணம் உள்ளது. அதுமட்டுமா ? நேட்டோப் படைகள் வேறு கண்காணித்து வருகிறது. போதாக்குறைக்கு நேட்டோ நாடுகளின் ஸ்பை சட்டலைட்( உளவு பார்க்கும் செயற்கைக்கோள்) வேறு கமராவில் விளக்கெண்ணையை ஊற்றி அவதானித்து வருகிறது. இது எல்லாம் இப்படி இருக்க அதிபர் கடாபி தலைநகரில் இருந்து எவ்வாறு தப்பிச் சென்றார் என்று எல்லாரும் குழப்பிப்போய் உள்ளனர். இதற்கு விடை நேற்று மாலைதான் கிடைத்தது !
அது என்ன வென்றால் பல மைல் நீளமான சுரங்கப் பாதை. லிபிய அதிபர் கேணல் கடாபியின் மாளிகைக்குள் இது இருக்கவில்லை என்பது அதை விட அதிர்ச்சியான விடையம். வழமையாக எல்லா அதிபர்களும் தமது மாளிகையில் இருந்து தப்பிச் செல்ல சுரங்கப் பாதையைக் கிண்டிவைத்திருப்பார்கள். ஆனால் கடாபி கொஞ்சம் வித்தியாசமானவர் போல ! சரி மாட்டருக்கு வருவோம்.
நேற்றைய தினம் மாலை கிளர்ச்சியாளர்கள் திரிபோலியில் உள்ள சாலை ஒன்றுக்கு அருகாமையில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். பல மைல்களுக்கு நீண்டு செல்லும் இச் சுரங்கபாதையின் கதவுகள் இருப்பால் ஆனவை. எவருக்கும் தெரியால் அமைக்கப்பட்டிருந்த இச் சுரங்கப் பாதை தலைநகரை விட்டு அடுத்த கிராமம் நோக்கிச் செல்கிறதாம். ஆனால் தப்பிச் சென்றவர்கள் அதனை இடைவழியில் உடைத்துவிட்டு தான் சென்றுள்ளனர். அதனால் அதன் முடிவு எங்கே எனக் கண்டுபிடிக்கமுடியவில்லையாம். இது இவ்வாறிருக்க சுரங்கப்பாதையின் உள்ளே சிறிய ரக வாகனம் ஓடக்கூடிய வைகையில் அது அமைக்கப்பட்டுள்ளது. போதாக்குறைக்கு தப்பி ஓடப் பயன்படுத்திய சிறிய வாகனம் ஒன்றும் தகர்க்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது.
எனவே கடாபி படு வேகமாக சுரங்கப்பாதைகள் ஊடாகத் தப்பிச் சென்றுள்ளார் ! பின்னர் அவ்வாகனம் தகர்க்கப்பட்டுள்ளது என நேட்டோப் படையினரும் பி.பி.சியினரும் தெரிவித்துள்ளனர். தற்போது கடாபியின் தலைக்கு பல கோடி ரூபா விலை வைக்கப்பட்டுள்ளது, சதாம் ஹுசைன்னுக்கு வைக்கப்பட்டது போல. ஆனால் சிக்குவாரா கடாபி என்பது தான் பெரும் சவாலாக உள்ளது. அடிக்கடி ரேடியோவில் மட்டும் அவர் குரல் ஒலிபரப்பாகி வருகிறது. கிளர்ச்சியாளர்களை எதிர்த்து போராடுமாறு அவர் தொடர்ந்தும் வலியுறுத்திவருகிறார். |
Geen opmerkingen:
Een reactie posten