புலிகளின் தேசியக்கொடி ஜேர்மனிய வெஸ்ட்பேலன்ஸ்டேடியன் உதைபந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற போட்டி ஆரம்ப அணிவகுப்பில் கடந்த சனிக்கிழமை இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை பொறுஷியா டொட்மென்ட் மற்றும் எப்சீ நியூரம்பேர்க் என்ற அணிகளுக்கிடையிலான போட்டியை முன்னிட்டு நடைபெற்ற அணிவகுப்பிலேயே புலிகளின் தேசியக்கொடி கொண்டு செல்லப்பட்டுள்ளது.
தமிழ் இளைஞர் அமைப்பும் பொறுஷியா டொட்மென்ட் ரசிகர்கள் அமைப்பும் ஒன்றிணைந்தே இந்த புலிகளின் கொடியினை அணிவகுப்பின் போது கொண்டு சென்றுள்ளனர். |
Geen opmerkingen:
Een reactie posten