தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 1 augustus 2011

சனல்4 காணொளி சாட்சியாளர்கள் நம்பகமான தகவல்களை வழங்கியுள்ளனர் – மில்லர்

[ ஞாயிற்றுக்கிழமை, 31 யூலை 2011, 01:47.28 AM GMT ]
சனல் 4 இறுதியாக வெளியிட்ட காணொளியில் தோன்றிய சாட்சியாளாகள் நம்பகமான தகவல்களையே வழங்கியுள்ளதாக சனல்4 ஊடகத்தின் ஊடகவியலாளர் ஜொனதன் மில்லர் தெரிவித்துள்ளார்.
உறுதிப்படுத்தாமல் சாட்சியங்கள் தொடர்பான தரவுகள் ஒளிபரப்புச் செய்யப்பட மாட்டாது.
கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே லீடர் செய்தித்தாளுக்கு மின்னஞ்சல் மூலம் வழங்கிய நேர் காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு தரப்பினரின் குற்றச்சாட்டுக்களை எவ்வித உறுதிப்படுத்தலுமின்றி வெறுமனே ஒளிபரப்புச் செய்வதில்லை.
சாட்சியாளர்கள் தொடர்பில் தாமும் தமது செய்தி ஆசிரியர்களும் பூரண திருப்தி கொண்டுள்ளதாக மில்லர் குறிப்பிட்டுள்ளார்.
சாட்சியாளர்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்ளப்பட்டது என்பதனை கூற முடியாது, அவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையக் கூடும்.
சாட்சியாளர்களின் குரல்கள் ஒளிபரப்புச் செய்யப்படவில்லை எனவும் பின்னணி பேசியவர்களே அவர்களது சாட்சியங்களுக்கு குரல் கொடுத்துள்ளதாகவும் மில்லர் தெரிவித்துள்ளார்.
எல்லா வழிகளையும் பயன்படுத்தி போராட்டத்தை முடிவுறுத்துமாறு சவேந்திர சில்வா 58 படையணிக்கு கட்டளையிட்டதாக சாட்சியாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் உத்தவிற்கு அமைய சவேந்திர சில்வா விசேட கூட்டமொன்றை கூட்டி படையினருக்கு இந்த அறிவிப்பினை விடுத்ததாக சாட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சனல்4 ஊடகத்திற்கு எதிராக பிரிட்டன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். எனினும், ஊடகங்களின் சுதந்திரத்தில் தலையீடு செய்யப் போவதில்லை என பிரிட்டன் உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten